கட்டா குஸ்தி 2 மீனு டீச்சர் முடியைக் காணோம்னு ரகளை செய்த ரசிகர்.. கொஞ்ச நேரத்தில் ஷாக் ஆன படக்குழு!

சென்னை: இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள கட்டா குஸ்தி 2 திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஐஸ்வர்யா லட்சுமி, மோக்‌ஷா, கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற கட்டா குஸ்தி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இந்த படம், குடும்ப ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

முதல் பாகத்தை விட இந்த முறை கதையை இன்னும் விரிவாக கொண்டு சென்றுள்ள இயக்குநர், விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி தம்பதிக்கு குழந்தை இருப்பது, அந்த குழந்தை பள்ளிக்குச் செல்வது என கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளார். அந்த பள்ளியில் வரும் மீனு டீச்சர் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்றுள்ளது.

டிரெய்லர் வெளியான போதே மீனு டீச்சர் கதாபாத்திரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. படம் வெளியான பிறகும் அந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள மோக்‌ஷாவின் தோற்றமும், நீளமான தலைமுடியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Where Is Meenu Teacher s Long Hair Fan s Funny Question Leaves Gatta Kusthi 2 Team in Splits

மீனு டீச்சர் முடி: படம் வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில், படக்குழு தற்போது பல்வேறு திரையரங்குகளுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறது. அப்படியொரு தியேட்டர் விசிட்டில் விஷ்ணு விஷால், மோக்‌ஷா, இயக்குநர் செல்லா அய்யாவு உள்ளிட்டோர் ரசிகர்களுடன் கலந்துரையாடினர்.

அப்போது ரசிகர் ஒருவர், மோக்‌ஷாவைப் பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியாமல், "படத்துல மீனு டீச்சருக்கு இவ்வளவு நீளமான முடி இருந்துச்சே... இப்போ முடியைக் காணோமே?" என்று ஜாலியாக கேள்வி எழுப்பினார். அந்த ஒரு கேள்வியால் சில நொடிகள் அங்கே இருந்த அனைவரும் சிரிப்பில் மூழ்கினர்.

கலாய்த்துவிட்ட விஷ்ணு விஷால்: உடனே மைக் வாங்கிய விஷ்ணு விஷால், "ஓஹோ... படத்துல நீங்க இதைத்தான் கவனிச்சீங்களா?" என்று கலாய்த்தார். அதோடு நிற்காமல், "கல்யாணம் ஆயிடுச்சா? கேமராவை கொஞ்சம் இவரு பக்கம் திருப்புங்க... இதை அப்படியே பதிவு பண்ணுங்க... நாளைக்கு வீட்டுல இருக்கிறவங்க எல்லாம் பார்த்துக்கட்டும்" என்று ரசிகரையே கிண்டல் செய்ய, அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Where Is Meenu Teacher s Long Hair Fan s Funny Question Leaves Gatta Kusthi 2 Team in Splits

இதற்கிடையில், கட்டா குஸ்தி 2 படத்தின் வசூலும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெளியான முதல் மூன்று நாட்களிலேயே உலகம் முழுவதும் ரூ.22 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வாரமும் குடும்ப ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்தால், வசூல் இன்னும் கணிசமாக உயரும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.

நல்ல லாபம்: ஏற்கனவே படத்தின் வெற்றி குறித்து பேசிய விஷ்ணு விஷால், "50 கோடி வசூல் செய்தாலே இந்த படம் எனக்கு மிகப்பெரிய வெற்றிதான். தயாரிப்பாளராகவும் அது நல்ல லாபம் தரும்" என்று தெரிவித்திருந்தார். தற்போது முதல் மூன்று நாட்களிலேயே 22 கோடி வசூலை கடந்துள்ள நிலையில், திரையரங்கு வசூலைத் தாண்டி ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை உள்ளிட்ட வருவாய்களும் சேரும்போது, கட்டா குஸ்தி 2 பொருளாதார ரீதியாக ஏற்கனவே வெற்றிப் படமாக மாறியுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

நெகட்டிவ் பிரச்சாரங்களை தாண்டி, குடும்ப ரசிகர்களின் ஆதரவோடு திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் கட்டா குஸ்தி 2, தற்போது வசூலிலும் சிரிப்பிலும் வெற்றியை பதிவு செய்து வருகிறது. ரசிகரின் ஒரு ஜாலி கேள்வியும், அதற்கு விஷ்ணு விஷால் கொடுத்த கலகலப்பான பதிலும் தற்போது படத்தின் வெற்றியைப் போலவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X