என் கிஃப்ட் எங்கே? நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு சாயிஷாவிடம் இப்படி கேட்கலாமா ஆர்யா?

சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் ஆர்யா அவரது மனைவி சாயிஷாவுக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கோலிவுட்டில் நிறைய ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகளாகி உள்ளனர். அதில் லேட்டஸ்ட் இணைப்பாக இருக்கும் பிரபலமான ஜோடி தான் ஆர்யா - சாயிஷா.

காதலர் தினத்துக்கு போஸ்ட் போட்ட கையோடு மனைவியிடம் ஆர்யா கிஃப்ட் கேட்டதை பார்த்து நெட்டிசன்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

ரீல் டு ரியல்

ரீல் டு ரியல்

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தில் நாயகியாக அறிமுகமானார் சாயிஷா. தொடர்ந்து கார்த்தி உடன் கடைக்குட்டி சிங்கம், சூர்யாவுடன் காப்பான், விஜய்சேதுபதி உடன் ஜுங்கா உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்த நிலையில், வாழ்க்கை முழுவதும் அவருடன் இணைந்து விட்டார்.

காதலே காதலே

விஜய் டிவியில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒளிபரப்பான காதலே காதலே நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் கலந்து கொண்டு அடித்த லூட்டிகளுக்கு அளவே இல்லை. சமீபத்தில் அது தொடர்பான வெளியான விஜய் டிவி புரமோவே வேற லெவல் ரீச் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நெற்றியில் முத்தம்

நெற்றியில் முத்தம்

காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் ஆர்யா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனைவி சாயிஷாவுக்கு நெற்றியில் முத்தம் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, காதல் தத்துவத்தை பொழிந்து தள்ளியுள்ளார். ஆர்யாவின் ரசிகர்கள் அந்த போட்டோவை ஷேர் செய்து வருகின்றனர்.

கிஃப்ட் எங்கே?

கிஃப்ட் எங்கே?

ஐ லவ் யூ, ஐ வில் லவ் யூன்னு சொல்லிட்டே போயிட்டு, கடைசியாக கிஃப்ட் எங்கே? என பப்ளிக்காக கேட்ட ஆர்யாவை பார்த்து நிறைய ரசிகர்கள் நிஜமாவே காண்டாகி உள்ளனர். அவங்களே உங்களுக்கு சூப்பரான கிஃப்ட் சார். இதை விட பெரிய கிஃப்ட் உங்களுக்கு கிடைக்காது என்று வாழ்த்தி வருகின்றனர். மேலும், சிலர் முதல்ல நீங்க என்ன கிஃப்ட் கொடுத்தீங்க என்றும் கேட்டு வருகின்றனர்.

எடெர்னிட்டி லவ்

எடெர்னிட்டி லவ்

நடிகை சாயிஷாவுக்கு ஷேர் செய்ய வேறு எந்த போட்டோவும் கிடைக்கவில்லை போல தெரிகிறது. அதே புகைப்படத்தையே போட்டு, முடிவில்லா காதலை என் வாழ்நாள் முழுவதும் உனக்கு அளிப்பேன் என் அன்பே என இவரும் கவிதை மழை பொழிந்து தள்ளி உள்ளார். ஆனால், கடைசி வரை அந்த கிஃப்ட் பத்தி பேச்சே எடுக்கல.

இங்கேயுமாடா

இங்கேயுமாடா

இவங்க ரெண்டு பேரும் இப்படி ட்விட்டரில் மாற்றி மாற்றி ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் போது, தல அஜித் ரசிகர்கள் சிலர், வலிமை பட அப்டேட்டை கேட்டு கமெண்ட் செய்துள்ளது வேற லெவல் காமெடி. கண்டிப்பா மாஸா படம் வரும் வெயிட் பண்ணுங்கப்பா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X