CSK: தோனி மனைவியுடன் விக்னேஷ் சிவன்.. தனியாவே சுற்றுகிறாரே.. நயன்தாரா எங்கே?.. ரசிகர்கள் கேள்வி!
சென்னை: சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் போட்டியை கடைசியாக நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் உடன் கண்டு ரசித்தார். ஆனால், அதன் பிறகு நயன்தாராவையும் விக்னேஷ் சிவனையும் ஒன்றாக பார்க்கவே முடியவில்லையே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டியை நேற்று அகமதாபாத் மைதானத்திற்கே சென்று இயக்குநர் விக்னேஷ் சிவன் கண்டு ரசித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், தான் இப்படியொரு கேள்வியை சமூக வலைதளங்களில் விக்னேஷ் சிவனிடம் நயன்தாரா ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

தோனியின் வெறியன்:
மகேந்திர சிங் தோனியை இந்தியாவின் பிரதமராகவே ஆக்கி விடலாம் என்றே பேட்டி ஒன்றில் விக்னேஷ் சிவன் சொல்லி இருந்தார். அந்த அளவுக்கு தோனி வெறியரான விக்னேஷ் சிவன் தோனியின் கடைசி ஐபிஎல் போட்டி என கருதப்பட்ட இறுதிப்போட்டியை அகமதாபாத்துக்கு சென்று பார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்னைக்கு மழை வரக்கூடாது கடவுளே என போட்டி ஆரம்பிக்கும் முன்னதாகவே மைதானத்தில் இருந்து வேண்டியபடி எடுத்த போட்டோவை போட்டு விக்னேஷ் சிவன் கேன்ஸில் இருந்து அகமதாபாத்துக்கு வந்து விட்டேன் என்பதை அறிவித்து விட்டார்.

தோனி மனைவியுடன் விக்னேஷ் சிவன்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டியில் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற இக்கட்டான சூழலில் ஜடஜே 6 மற்றும் பவுண்டரியை விளாசி 5வது முறையாக சென்னை அணிக்கு கோப்பை கிடைக்க தனது மேஜிக் ஆட்டத்தை கடைசி நேரத்தில் வெளிப்படுத்தினார்.
வெற்றி சந்தோஷத்தில் தோனியின் மனைவி சாக்ஷி தோனியுடன் இயக்குநர் விக்னேஷ் சிவன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே தோனியின் விளம்பரத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா எங்கே?:
சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் நடிகை நயன்தாரா கண்டு ரசித்தார். ஆனால், நேற்று நடந்த இறுதிப்போட்டிக்கு விக்னேஷ் சிவன் தனியாக வந்து போட்டியை கண்டு ரசித்தார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் அந்த புகைப்படங்களை பகிர்ந்த நிலையில், தலைவி நயன்தாரா எங்கே என விக்னேஷ் சிவன் பதிவுக்கு கீழ் லேடி சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கேன்ஸ் விருது விழாவுக்கும் வரல:
கணவர் விக்னேஷ் சிவன் உடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வரும் நயன்தாரா கேன்ஸ் திரைப்பட திருவிழாவிலும் கலந்து கொள்ளவில்லை. விக்னேஷ் சிவன் தனியாகத்தான் சென்றிருந்தார்.
இந்தியா திரும்பிய விக்னேஷ் சிவன் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கும் தனியாகவே வந்த நிலையில், ரசிகர்கள் இந்த கேள்வியை எழுப்பி உள்ளனர்.

ஜவானில் பிசி:
நடிகை நயன்தாரா ஜவான் படத்தின் இறுதி வேலைகளில் பிசியாக இருக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், தனது குழந்தைகளையும் அவர் கவனித்துக் கொள்வதாகவும் கூறுகின்றனர்.
இதன் காரணமாகவே விக்னேஷ் சிவன் உடன் கேன்ஸ் மற்றும் ஐபிஎல் இறுதிப்போட்டியில் அவர் பங்கேற்கவில்லை என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











