twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'எங்க அந்த நூடுல்ஸ் மண்டை? உங்களுக்கு அழகே அதுதானே? ரித்திகாவிடம் பாசமாக விசாரிக்கும் ரசிகர்கள்!

    By
    |

    சென்னை: தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ள நடிகை ரித்திகா சிங்கிடம், நூடுல்ஸ் மண்டை எங்கே என்று ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

    சுதா கொங்கரா இயக்கிய 'இறுதிச்சுற்று' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர், ரித்திகா சிங்.

    கிக் பாக்சிங் வீராங்கனையான இவர், பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்றவர்.

    ஆண்டவன் கட்டளை

    ஆண்டவன் கட்டளை

    இறுதிச்சுற்று படம் இந்தியில், சாலா கடூஸ் என்ற பெயரில் வெளியானது. மாதவன் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் ரித்திகாவுக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. இதையடுத்து மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை என்ற படத்தில் நடித்தார். இந்தப் படமும் ஹிட்டானது. பின்னர் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி.வாசு இயக்கிய சிவலிங்கா படத்திலும் ஹீரோயின் ஆனார்.

    ஓ மை கடவுளே

    ஓ மை கடவுளே

    தெலுங்கிலும் நடித்துள்ள ரித்திகா சிங்குக்கு இடையில் சில வருடங்கள் படங்கள் இல்லை. இதையடுத்து அசோக் செல்வன் ஜோடியாக, ஓ மை கடவுளே படத்தில் நடித்தார். வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், ஷா ரா உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இதில் ரித்திகாவை, ஹீரோ நூடுல்ஸ் மண்டை என்று அழைப்பார்.

    கருப்பு உடையில்

    கருப்பு உடையில்

    இந்த பெயராலேயே ரசிகர்களும் அவரை அழைக்கத் தொடங்கினர். அடிக்கடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடும் ரித்திகா, இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி இருக்கிறது. ரித்திகா கருப்பு உடையில், கொஞ்சம் கிளாமராக வெளியிட்டுள்ளார் இந்தப் புகைப்படங்களை. ஏராளமான நெட்டிசன்கள் அவர் அழகை வர்ணித்துள்ளனர்.

    நூடுல்ஸ் மண்டை

    நூடுல்ஸ் மண்டை

    ஒருவர், 'என்னங்க கேப்டன் மார்வல் ஆகப் போறீங்களா? டிரெஸ்சை பார்த்தா அப்படித்தான் இருக்கு என்று கேட்டிருக்கிறார். ஒரு ரசிகை, தமிழ் சினிமாவில் இருக்கும் அழகான ஹீரோயின் நீங்கள் என்று சொல்ல, அவருக்கு நன்றி சொல்லி இருக்கிறார், ரித்திகா. 'உங்களுக்கு நூடுல்ஸ் மண்டைதான் அழகே..அதை போய் காணாமப் பண்ணிட்டீங்களே?' என்று கேட்டிருக்கின்றனர் பல புள்ளிங்கோஸ்.

    ஜொலிக்குது

    ஜொலிக்குது

    சிலர் இந்த போட்டோவுல செம ஹாட்டா இருக்கீங்க என்று கூறியுள்ளனர். கருப்பு கலரை விரும்பறவங்களோட எண்ணங்கள் கலர்புல்லா இருக்கும்னு சொல்றாங்களே, உண்மையா? என்று கேட்டுள்ளனர் சிலர். முதல் படம் வைரம் மாதிரி ஜொலிக்குது என்று ஒருவர் கூறியுள்ளார். சுருட்டை முடிதான் உங்களுக்கு செம. இந்த ஹேர்ஸ்டைல் சுத்தமாக நல்லாவே இல்லை? என்று சிலர் கூறியுள்ளார்.

    கிளாமருக்கு மாறியாச்சா?

    கிளாமருக்கு மாறியாச்சா?

    ஒரு சில நெட்டிசன்கள், 'நீங்க வேற லெவல் அழகு. உங்களோட இரண்டு போட்டோவும் செம. அடிக்கடி இந்த மாதிரி போட்டோஸ் போடுங்க என்று கோரிக்கை வைத்துள்ளனர். 'நீங்க மட்டும்தான் அடக்கம் ஒடுக்கமா இருந்தீங்க.. இப்ப நீங்களும் கிளாமருக்கு மாறியாச்சா?' என்று ஒரு நெட்டிசன் கவலையோடு கேட்டிருக்கிறார். நடிகை ரித்திகாவின் இந்தப் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது.

    English summary
    Fans asks to Ritika Singh,'where is Noodles Mandai?'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X