Where is Pushpa: புலியே 2 ஸ்டெப் பின்னாடி எடுத்து வச்சா புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்.. ஏமிரா இதி?

சென்னை: நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா தி ரூல் படத்தின் டீசர் ஒன்று வெளியாகி உள்ளது.

போலீஸார் புஷ்பாவை 8 தோட்டாக்களால் சுட்டுக் கொன்று விட்டதாகவும் புஷ்பா தலைமைறைவாக இருக்கிறாரா? வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டாரா என ஏகப்பட்ட பில்டப்புகள் கொடுத்து கடைசியில் காட்டில் இருந்து வந்த வீடியோ ஒன்றை செய்திச் சேனலில் ஒளிபரப்பு செய்கின்றனர்.

Where is Pushpa: Pushpa The Rule new intro teaser is not upto the worth

அதில், புலி ஒன்று வேகமாக வந்து பின்னர், 2 அடி பின் வாங்க புஷ்பா அசால்ட்டாக புலியை கடந்து செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது.

Where is Pushpa: Pushpa The Rule new intro teaser is not upto the worth

புஷ்பா எங்கே?: புஷ்பா சாகலை.. உயிரோடு தானிருக்கிறார் என மக்கள் ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கும் போன்ற காட்சிகளுடன் புதிய ஹேர்ஸ்டைலில் அல்லு அர்ஜுன் அதிரடியாக போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்து கொண்டு புஷ்பா தி ரூல் எனும் சொல்லும் டீசர் வெளியாகி உள்ளது.

அல்லு அர்ஜுன் பிறந்தநாள்: 41வது பிறந்தநாளை ஏபரல் 8ம் தேதியான நாளை அல்லு அர்ஜுன் கொண்டாடவுள்ள நிலையில், இயக்குநர் சுகுமார் இப்படியொரு Where is Pushpa? டீசரை வெளியிட்டுள்ளார்.

Where is Pushpa: Pushpa The Rule new intro teaser is not upto the worth

ஆனால், புஷ்பா படம் மக்களை கவர்ந்த அளவுக்கு புஷ்பா 2 படத்தின் அறிமுக டீசர் இல்லை என்றே ரசிகர்கள் ஃபீல் செய்யும் விதமாக இந்த காட்சிகள் ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என்கிற ரேஞ்சில் உள்ளதாக நெட்டிசன்கள் ஏமிரா இது என ட்ரோல் செய்து வருகின்றனர்.

டீசர் எப்படி இருக்கு?: இதுவெறும் ட்ரெய்லர் தான் மெயின் பிக்சர் இதை விட ஏகப்பட்ட பில்டப்புகளுடன் வரும் என்றும் நெட்டிசன்கள் இப்பவே பீதியை கிளப்பி வருகின்றனர். மேலும், செம்மரக் கடத்தல் செய்த புஷ்பா அந்த பணத்தை வைத்து ஹார்ட் ஆப்பரேஷனுக்கு பணம் கொடுத்தார் என்றும் படிக்க வைத்தார் என்றும் நெஞ்சை நக்கும் காட்சிகளையும் வைத்து காண்டாக்கி உள்ளனர்.

Where is Pushpa: Pushpa The Rule new intro teaser is not upto the worth

புஷ்பா தி ரைஸ் திரைப்படம் கடந்த 2021ல் வெளியானது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் ஃபாசிலின் மிரட்டலான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தி பெல்ட்டிலும் புஷ்பா திரைப்படம் நல்ல வசூல் வேட்டையை நடத்திய நிலையில், 300 கோடி வரை இந்த படம் வசூல் ஈட்டியது. இந்நிலையில், 2வது பாகத்தை மேலும், பிரம்மாண்டமாக இயக்குநர் சுகுமார் இயக்கி வருவதாக கூறுகின்றனர்.

ஆனால், தற்போது வெளியாகி உள்ள அறிமுக டீசர் காட்சிகள் படத்தில் இருக்குமா? அல்லது வெறும் அறிமுகத்துக்கான காட்சிகள் மட்டுமா என ரசிகர்கள் அந்த டீசர் வீடியோவுக்கு கீழே கமெண்ட்டுகளை போட்டு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

புஷ்பா என்றால் ஃபிளவர் இல்லை ஃபயரு என முதல் பாகத்தில் காட்டுவாசி மனுஷனா அல்லு அர்ஜுன் சொன்ன போது வித்தியாசமாக இருந்தது ரசித்தார்கள். ஆனால், இந்த முறை ஹேர்ஸ்டைல் எல்லாம் மாற்றிக் கொண்டு மேலும், பில்டப் டானாகவே வருவாரா அல்லது ரசிகர்களை பிரம்மிக்க வைக்கும் காட்சிகள் படத்தில் இருக்குமா? ஓவர்டோஸ் ஆனாலும், வொர்க்கவுட் ஆகாதே என ஏகப்பட்ட விமர்சனங்களும் புஷ்பா தி ரூல் படத்துக்கு எதிராக கிளம்பி உள்ளன.

புஷ்பா முதல் பாகத்தின் கிளைமேக்ஸில் அல்லு அர்ஜுன் மற்றும் பகத் ஃபாசில் அரை நிர்வாணமாக வெறும் ஜட்டியுடன் சண்டை போடும் காட்சிகளே கடுமையாக ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், இந்த படத்தை ட்ரோல் மெட்டீரியலாக சுகுமார் மாற்றாமல் இருந்தாலே போதும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X