விஷாலை துரத்தும் 'அந்த 2' வார்த்தை: ஆக்ஷனில் இறங்க வேண்டிய நேரம் வந்தாச்சு
சென்னை: விஷால் பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் பதில் அளிக்க வேண்டிய நேரம் இது.
சென்னை தி. நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க கட்டிட பூட்டை உடைக்கப் போய் விஷால் கைதானார். திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அவர் மாலையில் விடுவிக்கப்பட்டார்.
முந்தைய நிர்வாகம் வைத்திருந்த வைப்பு நிதி ரூ. 7 கோடி எங்கே என்று தான் அனைவரும் கேட்கிறார்கள்.

விஷால்
தவறே செய்யாத என்னை கைது செய்வதா, நான் நீதிமன்றம் செல்வேன், எனக்கு நியாயம் கிடைக்கும் என்று விஷால் தெரிவித்துள்ளார். எல்லாம் சரி விஷால். ஆனால் அந்த ரூ. 7 கோடி பற்றி மட்டும் எதுவுமே கூற மாட்டேன் என்கிறீர்கள். மக்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பதே ரூ. 7 கோடி பற்றி தான்.

பேச்சு
கைது செய்துவிட்டார்கள், சும்மா விட மாட்டேன், என்னை யாரும் தடுக்க முடியாது, என் மனசாட்சி சுத்தம் என்று பன்ச் வசனம் பேசுவதை விட்டுவிட்டு ரூ. 7 கோடிக்கான கணக்கை காட்டினால் அனைவரும் தானாக அமைதியாகவிடப் போகிறார்கள். பேச்சை குறைத்துவிட்டு செயலில் இறங்கும் நேரம் இது விஷால். நிஜ வாழ்க்கையிலும் புரட்சி தளபதியாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

மனசாட்சி
உங்களின் மனசாட்சி சுத்தம் என்கிறீர்கள். உண்மை உங்கள் பக்கம் உள்ளது என்கிறீர்கள். அப்புறம் ஏன் பயப்பட வேண்டும். நாக்கு மீது பல்லை போட்டு பேசுபவர்கள் மீது அந்த ரூ. 7 கோடி தூக்கி எறியுங்கள் விஷால். அதன் பிறகு யாராவது பணத்தை சுருட்டிவிட்டார் விஷால் என்று சொல்ல முடியுமா?. நாங்கள் செய்யும் அனைத்தும் கணக்கில் உள்ளது என்று விஷால் தெரிவித்தார். அப்படி என்றால் அந்த கணக்கை காட்டி புகார் தெரிவித்தவர்களுக்கு பதில் அளிக்கலாமே.

படம்
சண்டக்கோழி என்பது நீங்கள் நடித்த படம். அந்த பெயர் நச்சென்று பொருந்துவது போன்று எப்பொழுது பார்த்தாலும் சண்டைக்கு பாய்வது உங்களுக்கு நீங்களே ஆப்பு வைத்துக் கொள்வது என்று சமூக வலைதளங்களில் சிரிக்கிறார்கள். விஷால் கைதானதை கூட நெட்டிசன்கள் மீம் போட்டு என்ஜாய் செய்தார்கள். ஒரு வருங்கால ச.ம.உ.க்கு இதெல்லாம் தேவையா?


Click it and Unblock the Notifications











