வனிதாவின் இரண்டாம் மகள் எங்கே?அப்பா அழைத்து சென்றுவிட்டாரா? கிசுகிசுக்கு விளக்கம் கொடுத்த வனிதா!
சென்னை : சோசியல் மீடியாவில் வைரல் ஸ்டார் என்று பெயர் எடுத்த வனிதாவின் இரண்டாவது மகளை அவரது அப்பா அழைத்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் நடித்தார். பின் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். திருமணத்துக்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதிலிருந்து விலகினார்.

வனிதா விஜயகுமார்
குடும்ப பிரச்சனை, மகன் பிரிவு, சொத்து தகராறு என ஏகப்பட்ட பிரச்சனைகளால் வனிதாவின் பெயர் டேமேஜ் ஆனது. அதே நேரம் சின்ன கேப்புக்கு பின்பு விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அதிரடியாக பேசி போட்டியாளர்களிடையே சண்டையிட்டார். இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது.

படு பிஸி
நடிகை வனிதா தற்போது, அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டும் யூடியூப் சேனல் மற்றும் சொந்தமாக துணி மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடையையும் நடத்தி வருகிறார்.

இரண்டாவது மகள் எங்கே?
இந்நிலையில், வனிதாவின் இளைய மகள் ஜெயனிதாவை அவரது தந்தை அழைத்து சென்று விட்டதாகவும், தற்போது வனிதாவும் மூத்த மகள் ஜோத்விகாவுடன் தனியாக வசித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து வனிதா எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தார்.

அவள் மனசெல்லாம் இங்கு தான் இருக்கும்
இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த வனிதாவிடம், இளைய மகள் உங்களுடன் இல்லையா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த வனிதா, அவள் அவரது அப்பாவுடன் ஹைதராபாத்தில் படித்துக் கொண்டு இருக்கிறாள். சமீபத்தில் நான் அவளை சந்தித்து வந்தேன். ஆனால், அவள் மனசெல்லாம் இங்கு தான் இருக்கும். நான் தற்போது பிஸியாக இருக்கிறேன் மேலும் இந்த சமயத்தில் கண்டிப்பாக அவளுடன் யாராவது இருக்க வேண்டும் அங்கு அவள் பாதுகாப்பாக இருக்கிறாள் என்றார்.


Click it and Unblock the Notifications











