மீரா மிதுன் அவர சந்தித்ததற்கு காரணம் இதுதானாம்! சித்தப்பு செஞ்ச காரியத்த பாருங்க!
Recommended Video
சென்னை: நடிகை மீரா மிதுன் இயக்குநர் சரவணனை சந்தித்ததற்கான காரணம் வெளியாகியிருக்கிறது.
நடிகை மீரா மிதுன் என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. மீரா மிதுன் தன்னுடன் பழகியவர்கள் குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இயக்குநர் சேரன் தன்னை தவறான நோக்கத்தில் தொட்டதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து வெளியே வந்த அவர், பிக்பாஸ் வீட்டில் தன்னை பலர் காதலித்தாகவும் வெளியே சொல்ல பயந்ததாகவும் தெரிவித்தார்.

எச்சரிக்கை
இந்நிலையில் சரவணனுடன் கோவில் விழா ஒன்றில் மீரா மிதுனும் நெருக்கமாக இருக்கும் போட்டோ வைரலானது. இதனை பார்த்த நெட்டிசன்கள், மீராவிடம் அதிகம் நெருக்கம் காட்ட வேண்டாம் என சரவணனை எச்சரித்தனர்.

சரவணன் கட்டிய கோவில்
இதனிடையே மீரா மிதுன், சரவணனுடன் எப்போது எங்கே என்ன நிகழ்ச்சியில் எடுத்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சரவணனின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் வடக்காடு கிராமத்தில் சரவணன் ஒரு கோவில் கட்டியுள்ளார்.

அப்பாவுக்கும் சிலை
விநாயகர், வீரமுனி சிலைகளுக்கு நடுவே போலீஸ்காரரான தனது அப்பாவுக்கும் சிலை வைதிருக்கிறார் சரவணன். இதன் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பிக்பாஸ் சீசன் 3யில் தன்னுடன் பங்கேற்ற, தனக்கு நெருக்கமான நண்பர்களையும் அழைத்துள்ளார்.
பிக்பாஸ் பிரபலங்கள்
அந்த விழாவில் ரித்திவிகா, சாண்டி, தர்ஷன் மற்றும் மீரா மிதுன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அப்போது எடுத்த போட்டோக்கள்தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காலில் விழுந்த மீரா
மேலும் அந்த நிகழ்ச்சியில் மீரா மிதுன், சரவணன் மற்றும அவரது மனைவியிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார். மீராவுக்கு பொன்னாடை போர்த்தி மரியதை செய்கின்றனர் சரவணனும் அவரது மனைவியும்.

உண்மையான ஆதரவாளர்கள்
அந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் மீரா மிதுன். மேலும் பிக்பாஸ் சீசன் 3யில் என்னுடைய உண்மையான ஆதரவாளர்கள், பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த நாட்களில் இவர்கள்தான் என் வலிமை என தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











