‘வலிமை’யில் அஜித்தின் தங்கையாக நடித்தது இவரா?... அட… நம்பவே முடியலையே!

சென்னை : வலிமை திரைப்படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடித்த நடிகை குறித்து சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது.

வினோத் இயக்கத்தில் அஜித்தின் வலிமை படம் கடந்த 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா கும்மகொண்டா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

பல கோடி வசூல்

பல கோடி வசூல்

2019ம் ஆண்டு விஸ்வாசம் திரைப்படத்திற்கு பிறகு திரையரங்கில் வெளியாகி உள்ள படம் வலிமை என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. பைக் ரேஸிங், சண்டைகாட்சிகள் சென்டிமெண்ட் படம் முழுக்க இருந்ததால், சுமாரான படம் என சிலர் கருத்து கூறி வருகின்றனர். ஆனால் அஜித்தின் ரசிகர்களோ படத்தை கொண்டாடி வருகின்றனர். வலிமை வெளியான 10 நாட்களில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

முதல் பான் இந்திய படம்

முதல் பான் இந்திய படம்

அஜித்குமாரின் 60 படமான வலிமை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது. அஜித்தின் இத்தனை வருட சினிமா பயணத்தில் இது தான் அவரின் முதல் பான் இந்திய திரைப்படமாகும்.

சுவாரசியத் தகவல்

சுவாரசியத் தகவல்

இந்நிலையில், இத்திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது. 1995ம் ஆண்டு சௌந்தர்யா, ரம்யாகிருஷ்ணன் நடித்த அம்மன் திரைப்படத்தில் அம்மன் தாயீ கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டாலும், அம்மன் திரைப்படத்திற்கு பிறகு இவரை எந்த படத்திலும் பார்க்க முடியவில்லை.

நம்பவே முடியலே

நம்பவே முடியலே

குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்த, நடிகை சுனாயனா தற்போது வலிமை படத்தில் அஜித்துக்கு சகோதரியாக நடித்திருக்கிறார். அட உண்மையில் அந்த அம்மன் படத்தில் நடித்த பொண்ணா இது நம்பவே முடியலே என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X