For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கண்டிப்பா இந்த 2 பேர்ல தான் ஒருத்தர் அவுட்டாக போறாங்க.. பிக் பாஸ் 4 எவிக்ஷன் லிஸ்ட் ஒரு அலசல்!

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் வீட்டை விட்டு வெளியேறப் போறது இந்த 8 பேரில் ஒருவர் தான் என்பது முடிவாகி விட்டது.

  RamyaPandiyan, SanamShetty and six others nominated for elimination

  அது யாராக இருக்கும் என ஏகப்பட்ட கணிப்புகள் சமூக வலைதளங்களில் எழுந்து வருகின்றன.

  16 போட்டியாளர்களில் தேர்வாகி உள்ள 8 பேரில் மக்கள் யாரை எல்லாம் ஓட்டுப் போட்டு காப்பாற்றுவார்கள், யாரை வெளியேற்றுவார்கள் என்பது குறித்த ஒரு சின்ன அலசலை இங்கே காண்போம்.

  Bigg Boss Tamil 4 Unseen: மொட்டை சுரேஷ் குறட்டை தாங்க முடியல.. பங்கம் பண்ணும் ரியோ ராஜ்.. வொர்த்!

  கதை சிறப்பா இல்லை

  கதை சிறப்பா இல்லை

  பிக் பாஸ் தமிழ் 4ம் சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட 16 பேரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை பிக் பாஸ் வீட்டில் கூறி வருகின்றனர். அதில், 8 பேர் சொன்ன கதைகள் சிறப்பாக இல்லை என மற்ற போட்டியாளர்கள் முடிவு செய்து கட்டம் கட்டிய பட்டியல் வெளியாகி விட்டது. அந்த 8 பேரில் யார் உள்ளே இருப்பார்கள், யார் வெளியே போவார்கள் என்கிற கெஸ்ஸிங்கை பார்க்கலாம்.

  சனம் ஷெட்டிக்கு வாய்ப்பு இருக்கா

  சனம் ஷெட்டிக்கு வாய்ப்பு இருக்கா

  கடந்த பிக் பாஸ் சீசனில் இறுதி வரை இருந்த தர்ஷனின் முன்னாள் காதலியான சனம் ஷெட்டி அந்த 8 பேரில் ஒருவராக தேர்வாகி உள்ளார். ஆனால், பாலாஜி முருகதாஸ் சொன்ன அளவுக்கு அவரது கதை ஒன்றும் அந்த அளவுக்கு மோசமில்லை. மேலும், சனம் ஷெட்டிக்கு ஓட்டுப் போட்டு சேவ் பண்ண ரசிகர்கள் இருப்பதால், சனம் ஷெட்டி வெளியே போக வாய்ப்பில்லை.

  குட்டிக் குழந்தை இருப்பாரா

  குட்டிக் குழந்தை இருப்பாரா

  ஒல்லியா இருந்தேன், பட வாய்ப்புகள் கிடைக்கலைன்னு மொக்கையா ஒரு ஸ்டோரி சொன்ன குட்டிக் குழந்தை கேப்ரில்லா இந்த வீட்டில் தொடர்வாரா? என்றால் அது சற்று சந்தேகமான ஒன்று தான். இதுவரை எந்த வித சண்டையிலும் சிக்காமல், டான்ஸ் ஆடும் போது மட்டுமே தலை காட்டுகிறார். ஆனால், இவருக்கும் இன்ஸ்டாவில் ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால், இவர் வெளியேறுவாரா? மாட்டாரா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

  சீனியர் மாடல்

  சீனியர் மாடல்

  நான் சூப்பர் மாடல் இல்லை, சீனியர் மாடல் என வீட்டில் இருந்தபடியே கடந்த சீசன் பிக் பாஸ் போட்டியாளரான சர்ச்சை நடிகை மீரா மிதுனை சீண்டி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார் சம்யுக்தா. சைலன்ட்டா இருந்தாலும் உள்ளுக்குள்ள செம சேட்டை இருக்கு என்பதால், இவர் வீட்டை விட்டு அடுத்த வாரம் செல்ல மாட்டார் என்றே தெரிகிறது.

  இப்ப நான் டெராராக்கும்

  இப்ப நான் டெராராக்கும்

  இதுவரை சாதுவாக இருந்து வந்த நடிகை ரேகா, திடீரென எவிக்‌ஷன் அறிவிப்புக்கு பிறகு டெரர் ஆகி உள்ளார். எங்கே நம்மள வீட்டை விட்டு வெளியே அனுப்பிடுவாங்களோ என பயந்து சண்டை செய்யத் தொடங்கி உள்ளார் நடிகை ரேகா. அதன் காரணமாக நடிகை ரேகா வெளியேற அதிகளவில் வாய்ப்பில்லை என்றே தெரிகிறது பார்க்கலாம்.

  தலைவி ரம்யா பாண்டியன்

  தலைவி ரம்யா பாண்டியன்

  முதல் வார தலைவியாக பிக் பாஸால் அறிவிக்கப்பட்ட நடிகை ரம்யா பாண்டியன் எல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் வெளியேறினால், ஏகப்பட்ட ரசிகர்கள், டிவியை ஆஃப் செய்து விடுவார்கள் என்பது பிக் பாஸ்க்கே தெரியும். அதனால், ரம்யா பாண்டியன் வெளியேறவும் சான்ஸே இல்லை என்பதை திட்டவட்டமாக பதிவு செய்கிறோம்.

  மொட்டை மாமனார் சுரேஷ் சக்கரவர்த்தி

  மொட்டை மாமனார் சுரேஷ் சக்கரவர்த்தி

  சுரேஷ் சக்கரவர்த்தி தான் மீம் கிரியேட்டர்களுக்கும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் கன்டென்ட் கொடுத்துக்கிட்டு இருக்காரு, தனது மகனுக்கு ஏற்பட்ட ரத்தப் புற்றுநோய் கதையை சொல்லி பலரையும் நெகிழ வைத்தாலும், கடைசியா அனிதாவுக்கு நோஸ் கட் கொடுப்பது போல கொடுத்த சேட்டை காரணமாக எவிக்‌ஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ளார். ஆனால், முதல் வாரத்தில் நிச்சயமாக சுரேஷ் வெளியேற மாட்டார்.

  நீ பேசாம சூப்பர் சிங்கருக்கே போயிடு

  நீ பேசாம சூப்பர் சிங்கருக்கே போயிடு

  சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான இன்னொரு சுட்டிக் குழந்தை ஆஜீத், அந்த வீட்டில் எதுக்கு இருக்காருன்னே தெரியல, பாட்டு பாட மட்டுமே தலையை காட்டும் ஆஜித், நிச்சயம் அடுத்த வார எவிக்‌ஷன் லிஸ்டில் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளன. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்காக ஆஜீத்துக்கு ஓட்டு போட்டவர்கள் ஓட்டுப் போட்டு காப்பாற்றினால் தான் அதிசயம் ஏதாவது நடக்கும்.

  குட்டிக் கதை சொன்ன ஷிவானி

  குட்டிக் கதை சொன்ன ஷிவானி

  ஷிவானி சொன்ன குட்டிக் கதைக்கு அப்பவே பிக் பாஸ் அவரை தலை மேல குட்டு வைத்து வெளியே அனுப்பி இருக்கணும்.. ஆனால், எல்லாரும் சோகக் கதை சொல்லித் தான் வீட்டில் இருக்க வேண்டுமா, இந்த டாஸ்க் எல்லாம் என்ன ஒண்ணும் பண்ணாது, எப்படி இருந்தாலும், வெளியே இருக்கும் 2 மில்லியன் ரசிகர்கள் கூட்டம் என்னை காப்பற்றும் என இருக்கும் ஷிவானியும் அடுத்த வாரம் கண்டிப்பா வெளியே போக வாய்ப்பில்லை.

  ஓட்டு உரிமை

  ஓட்டு உரிமை

  சீக்கிரமே ரசிகர்களுக்கு ஓட்டு உரிமை கிடைத்து விடும், நாங்கள் எதிர்பார்க்கும் போட்டியாளர்கள் வெளியே போவார்களா? இல்லையா? என்பதை நீங்கள் போடப் போகும் அந்த ஓட்டுக்கள் தான் முடிவு செய்யப் போகிறது. ஆஜீத் மற்றும் கேப்ரில்லா ஆகிய இருவரில் ஒருவர் வெளியேறுவாரா? இல்லை ரேகா, சம்யுக்தா இவர்களில் யாராவது வெளியேறுவார்களா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

  English summary
  Super Singer Aajeedh and Gabriella are highly expected contestant in the eviction list for the next week Bigg Boss Tamil 4 house.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X