twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொங்கல் ரேஸில் முந்தியது யார்? சூர்யா vs விக்ரம் vs பிரபுதேவா!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    சூர்யா vs விக்ரம் vs பிரபுதேவா!பொங்கல் ரேஸில் முந்தியது யார்?

    சென்னை : 2018ம் ஆண்டு பொங்கலுக்கு 9 படங்கள் வெளியாகும் நிலையில் இருந்து பின்னர் 'தானா சேர்ந்த கூட்டம்',''ஸ்கெட்ச்', 'குலேபகாவலி' ஆகிய மூன்று படங்கள் வெளிவந்தன.

    இவற்றில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கான விளம்பரங்கள் அதிகமாக இருந்தன. மற்ற இரண்டு படங்களுக்கும் சுமாராகவே இருந்தன.

    இந்த மூன்று படங்களில் வசூல், விமர்சன ரீதியாக சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படம் முந்தியிருக்கிறது.

    பொங்கல் ரிலீஸ்

    பொங்கல் ரிலீஸ்

    பொங்கலை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அதாவது 12-ம் தேதியே மூன்று படங்களும் வெளியாகின. 'தானா சேர்ந்த கூட்டம்' படம் தெலுங்கில் 'கேங்' என்ற பெயரிலும் வெளியானது. அங்கும் ப்ரொமோஷன் நன்றாகவே நடைபெற்றது.

    விடுமுறை நாட்கள் என்பதால்

    விடுமுறை நாட்கள் என்பதால்

    முதல் நாளிலேயே எதிர்பார்த்த அளவிற்கு இந்த படங்களுக்கு வசூல் அமையவில்லை என்பதுதான் உண்மை நிலவரம். அடுத்து சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்கள் விடுமுறை என்பதால் பெரும்பாலான நகர்ப்புற தியேட்டர்களில் படத்திற்கு ஓரளவு அரங்கு நிறைந்துள்ளது.

    தானா சேர்ந்த கூட்டம் முந்துகிறது

    தானா சேர்ந்த கூட்டம் முந்துகிறது

    நகர்ப் புறங்களில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்குத்தான் மற்ற இரண்டு படங்களை விடவும் ஓரளவிற்கு கூட்டம் கூடியுள்ளது. மூன்று படங்களும் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்பதுதான் உண்மை.

    குறை சொல்லும் ரசிகர்கள்

    குறை சொல்லும் ரசிகர்கள்

    படம் பார்க்கும் ரசிகர்களும் படங்களைப் பற்றி குறையாகத்தான் சொல்லி வருகிறார்கள். இருந்தாலும் பொங்கல் விடுமுறையைக் கொண்டாட வேறு படங்கள் இல்லாததால் ரசிகர்கள் அவரவர் விருப்பத்திற்கேற்றபடி படங்களைப் பார்த்து வருகிறார்கள்.

    தமிழ்நாடு முழுவதும்

    தமிழ்நாடு முழுவதும்

    தற்போது 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் நான்கு நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. முதல் நாளில் ஏழேகால் வசூல் செய்த 'TSK' திங்கட்கிழமை வரை கிட்டத்தட்ட 35 கோடி தமிழ்நாட்டில் மட்டும் வசூலித்துள்ளது.

    பார்டரில் தப்பிக்கும்

    பார்டரில் தப்பிக்கும்

    அவர்களின் விருப்பங்களில் 'தானா சேர்ந்த கூட்டம்' தான் முதலில் உள்ளது. தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால், படம் பற்றி பல்வேறு விதமாக விமர்சனம் வந்தாலும், வியாபார ரீதியாக 'தானா சேர்ந்த கூட்டம்' படம் பார்டரில் தப்பிக்கும் எனக் கூறப்படுகிறது.

    English summary
    In the year 2018, 'Thaana serndha koottam, 'Sketch' and 'Gulaebaghavali' films are released on Pongal. These three films collections are critical and TSK just escaped from loss.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X