2019ஆம் ஆண்டில் பட்டைய கிளப்பிய படங்கள்.. உங்களுக்கு பிடித்த படம் எது.. ஓட்டு போட்டு ஷேர் பண்ணுங்க!

சென்னை: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியான நிலையில் உங்களுக்கு பிடித்த படம் எது என்பதை இங்கு பகிரலாம்.

தமிழ் சினிமாவில் வாரா வாரம் குறைந்தது ஒரு படமாவது ரிலீஸாகி விடுகிறது. அல்லது ஒரே நேரத்தில் 4, 5 படங்களுக்கு மேல் ரிலீஸ் ஆகி பட்டை கிளப்புகிறது.

ஒரே மாதத்தில் 10 படங்களுக்கும் மேல் ரிலிஸ் ஆகிறது. எத்தனை படங்கள் ரிலீஸ் ஆனாலும் ரசிகர்களின் மனதை கவரும் படங்கள் மட்டுமே வசூலை குவிக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான படங்கள் குறித்து ஒரு பார்வை..

பிகில்

பிகில்

நடிகர் விஜய் இயக்குநர் அட்லீ இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் உருவான படம் பிகில். இந்தப்படம் இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸாக வெளியானது. இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு வெளியான இப்படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடினர்.

விஸ்வாசம்

விஸ்வாசம்

இந்த ஆண்டு அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான படம் விஸ்வாசம். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். கிராமத்து பாணியில் உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.

அசுரன்

அசுரன்

தனுஷின் நடிப்பில் வெளியான அசுரன் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிகர் தனுஷ் பட்டையை கிளப்பியிருப்பார். அவரது நடிப்பை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் நிச்சயம் அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று மனதாரப் பாராட்டினர்.

கைதி

கைதி

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நாயகியே இல்லை. ஆனால் விறுவிறுப்பு குறையாமல் சென்றதால் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றது.

பேட்ட

பேட்ட

பொங்கல் விருந்தாக ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பிய படம் பேட்ட. இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். சிம்ரன், சசிக்குமார், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், ஆடுகளம் நரேன், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் என ஒரு பெரிய பட்டாளமே நடித்திருந்தனர். ரஜினியின் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

நம்ம வீட்டுப் பிள்ளை

நம்ம வீட்டுப் பிள்ளை

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் நம்ம வீட்டுப்பிள்ளை. மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் கூட்டணியில் வெளியான படம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்திருந்தார். அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இந்தப்படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

கோமாளி

கோமாளி

ஜெயம் ரவி காஜல் அகர்வால் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படம் கோமாளி. இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 16 ஆண்டுகள் கோமாவில் இருந்த இளைஞன் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்களை வியப்புடன் பார்ப்பதை வேடிக்கையாக சொன்ன படம் கோமாளி. ஜெயம் ரவி படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றது இப்படம்.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். இந்தப்படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்திருந்தார். இந்தப் படம் இளைஞர்களால் பெரிதும் கவரப்பட்டது. இந்த ஆண்டு வெளியான இந்த 8 படங்களில் உங்களுக்கு பிடித்த படத்தை ஷேர் செய்ய ஓட்டு போடுங்கள்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X