twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நயன்தாராவை முந்திய அனுஷ்கா, தீபிகா... பாக்ஸ் ஆபிஸில் இந்த வார டாப் எது?

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : குடியரசு தின ஸ்பெஷலாக 'நிமிர்', 'பாகமதி', 'மன்னர் வகையறா', 'பத்மாவத்' போன்ற படங்கள் வெளியாகி இருந்தன.

    இந்த நான்கு படங்களுக்குமே கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்துள்ளன.

    தற்போது இப்படங்கள் சென்னையில் முதல் நான் முடிவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்கிற விபரங்கள் வெளியாகி உள்ளன.

    நிமிர் வசூல்

    நிமிர் வசூல்

    உதயநிதி நடித்த 'மகேஷின்டே பிரதிகாரம்' ரீமேக்கான 'நிமிர்' படம் நேற்று ஒரு நாள் சென்னையில் மட்டும் ரூ. 24 லட்சம் வசூல் செய்துள்ளது. எதிர்பார்ப்பு மிகுந்த ரீமேக் படமாக வெளியான 'நிமிர்' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    மன்னர் வகையறா

    மன்னர் வகையறா

    இந்த வாரம் வெளியான படங்களில் 'மன்னர் வகையறா' தான் கடைசி இடத்தைப் பிடிக்கும் நிலையில் இருக்கிறது. பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல், ஆனந்தி நடித்த இந்தப் படத்திற்கு வரவேற்பு குறைவே.

    அனுஷ்கா பட வசூல்

    அனுஷ்கா பட வசூல்

    அனுஷ்கா கதையின் நாயகியாக நடிக்க தமிழில் 'பாகமதி' எனும் பெயரில் வெளியாகியிருக்கும் படம் ரூ. 37 லட்சம் சென்னையில் மட்டும் வசூல் வசூல் செய்துள்ளது. இது நயன் தாராவின் 'அறம் ' முதல் நாள் சென்னை வசூலை விட அதிகம்.

    பத்மாவத் வசூல்

    பத்மாவத் வசூல்

    பாலிவுட் படமான பத்மாவத் சென்னையில் மட்டும் ரூ. 52 லட்சம் வசூல் செய்துள்ளது. தீபிகா படுகோனேவின் 'பத்மாவத்' திரைப்படம் நாடு முழுவதும் இரண்டு நாட்களில் ரூபாய் 50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    வார இறுதிகளில் அதிகரிக்கும்

    வார இறுதிகளில் அதிகரிக்கும்

    200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'பத்மாவத்' இதே அளவு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றால் படம் பங்கம் இல்லாமல் தப்பிக்கும். இன்னும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் படங்களின் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    தானா சேர்ந்த கூட்டம்

    தானா சேர்ந்த கூட்டம்

    பொங்கல் பண்டிகையை தாண்டி 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு பெரியளவில் கூட்டம் இல்லை, முதல் வாரம் படத்திற்கு நல்ல வசூல் வந்தது. இப்படம் சென்னையில் ரூ 6.5 கோடி தான் வசூல் செய்துள்ளது. பல பகுதிகளில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை தூக்கிவிட்டனர்.

    வேலைக்காரன் வசூலை விட குறைவு

    வேலைக்காரன் வசூலை விட குறைவு

    சமீபத்தில் வந்த வேலைக்காரன் கூட ரூ 9 கோடி சென்னையில் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. பொங்கலுக்கு வெளியான 'ஸ்கெட்ச்', 'குலேபகாவலி' ஆகிய படங்களும் பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டுவிட்டன.

    English summary
    'Nimir', 'Bhaagamathie', 'mannar vagaiyara' and 'Padmaavat' were released as Republic Day Special. These four films have only mixed reviews. Udhayanidhi's 'Nimir' has been collected 24 lakhs yesterday at chennai. Bollywood movie Padmaavat has been collected Rs. 52 lakhs in chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X