twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் காலமானார்.. எந்த படத்திற்காக ஆஸ்கர் விருதை சீன் கானரி வென்றார் தெரியுமா?

    |

    இங்கிலாந்து: ஸ்காட்லாந்து நடிகரான சீன் கானரி தனது 90வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

    அகில உலகிற்கே முதல் முறையாக 007 எனும் ஜேம்ஸ் பாண்டை அறிமுகப்படுத்திய முதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் சீன் கானரியின் மறைவு ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது.

    2020ம் ஆண்டின் அடுத்த சோகம் என ஹாலிவுட் ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர். ஜேம்ஸ் பாண்ட் படங்களை தாண்டி ஏகப்பட்ட நல்ல கதையம்சங்கள் கொண்ட படங்களிலும் நடித்துள்ளார் சீன் கானரி.

     டிரைவர் மகனாக பிறந்து.. பால்காரராக வாழ்கையை தொடங்கி.. ஜேம்ஸ் பாண்ட் சரித்திரம் படைத்த சீன் கானரி! டிரைவர் மகனாக பிறந்து.. பால்காரராக வாழ்கையை தொடங்கி.. ஜேம்ஸ் பாண்ட் சரித்திரம் படைத்த சீன் கானரி!

    முதல் ஜேம்ஸ் பாண்ட்

    முதல் ஜேம்ஸ் பாண்ட்

    1930ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தவர் தாமஸ் சீன் கானரி. லிலியாக்ஸ் இன் தி ஸ்ப்ரிங் எனும் படத்தில் அங்கீகாரமற்ற ரோலில் 1954ல் சினிமா உலகிற்கு நுழைந்த ஒரு இளைஞர், அகில உலகத்தையே ஆட்டிப் படைக்கும் முதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகராக மாறுவார் என்பதை யாருமே அறிந்திருக்க மாட்டார்கள்.

    எட்டு ஆண்டுகள் போராட்டம்

    எட்டு ஆண்டுகள் போராட்டம்

    சீன் கானரி எடுத்த உடனே ஜேம்ஸ் பாண்டாக குதித்து விடவில்லை. சினிமாவில் 1954ம் ஆண்டு முதல் 1962ம் ஆண்டு வரை சுமார் எட்டு ஆண்டுகள் கிடைக்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து, ஹீரோவாகி ஏகப்பட்ட போராட்டங்களை சந்தித்த பின்னர் தான் 1962ம் ஆண்டு டாக்டர் நோ படத்தில் ஜேம்ஸ் பாண்டாக அவதாரம் எடுத்தார்.

    சிறந்த ஜேம்ஸ் பாண்ட்

    சிறந்த ஜேம்ஸ் பாண்ட்

    டாக்டர் நோ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே ஃபிரம் ரஷ்யா வித் லவ் படத்திலும் ஜேம்ஸ் பாண்டாக மிரட்டினார். கை சும்மா விளையாடுது கன்ல என்கிற போக்கிரி பட வசனம் இவருக்குத் தான் பொருந்தும். தொடர்ந்து, கோல்டு ஃபிங்கர், தண்டர் பால், யூ ஒன்லி லிவ் ட்வைஸ், டைமண்ட்ஸ் ஆர் ஃபார் எவர், நெவர் சே நெவர் அகைன் என எக்கச்சக்க படங்களில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த இவர் தான் சிறந்த ஜேம்ஸ் பாண்ட் என இன்றளவும் மற்ற ஜேம்ஸ் பாண்ட் நடிகர்களே போற்றும் அளவுக்கு பெயர் எடுத்தவர்.

    தி அன்டச்சபிள்ஸ் (The Untouchables)

    தி அன்டச்சபிள்ஸ் (The Untouchables)

    இங்கிலாந்து படங்களில் மட்டுமின்றி அமெரிக்க படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் சீன் கானரி. 1987ம் ஆண்டு இயக்குநர் பிரையான் டி பால்மா இயக்கத்தில் ராபர்ட் டி நீரோ உள்ளிட்ட ஜாம்பவான் நடிகர்கள் நடித்த The Untoucables படத்தில் ஜிம்மி மலோன் எனும் போலீஸ் அதிகாரியாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றார் சீன் கானரி.

    அவெஞ்சர்ஸ் படத்திலும்

    அவெஞ்சர்ஸ் படத்திலும்

    ஜேம்ஸ் பாண்ட் அல்லாத பல படங்களிலும் தனது முத்திரை நடிப்பை சீன் கானரி வெளிப்படுத்தி உள்ளார். ரைசிங் சன், க்யூபா, ஃபர்ஸ்ட் நைட், டிராகன் ஹார்ட், தி ராக், தி லீக் ஆஃப் எக்ஸ்ட்ராடினரி ஜெண்டில்மென் மற்றும் அவெஞ்சர்ஸ் படத்திலும் நடித்து அசத்தி உள்ளார் சீன் கானரி. அவெஞ்சர்ஸ் படத்தில் Sir August de Wynter கதாபாத்திரத்தில் நடித்து கலக்கினார்.

    கறுப்பு நாள்

    கறுப்பு நாள்

    இங்கிலாந்து மற்றும் ஹாலிவுட் திரை உலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகத்திற்கும் சீன் கானரியின் மறைவு தினமான இன்று ஒரு கறுப்பு நாளாகவே மாறிவிட்டது. ஏகப்பட்ட ஹாலிவுட் பிரபலங்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் சீன் கானரியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Late actor Sean Connery got Oscar in 1988, when he was named best supporting actor for his role as an Irish cop in The Untouchables.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X