twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிரிப்ப ஃபேக்குன்னு சொல்லிட்டாங்க.. டிஸ்டன்ஸ் மெயிண்டைன் பண்ணாங்க.. கமலிடம் புலம்பிய ஹவுஸ்மேட்ஸ்!

    |

    சென்னை: பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஹவுஸ்மேட்ஸ் கூறியதில் எது தங்களை ரொம்ப பாதித்தது என்று கமலிடம் கவலையுடன் ஷேர் செய்தனர் ஹவுஸ்மேட்ஸ்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே இன்று நடைபெற உள்ளது. இதற்கான ஷுட்டிங் விடிய விடிய நடைபெற்று வருகிறது.

    இதனை முன்னிட்டு கடந்த வாரம் கடைசியாக ஏற்கனவே எவிக்ட்டான ஹவுஸ்மேட்ஸ் பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

    பிக்பாஸ் வீட்டில் ஆரியிடம் பேசியது என்ன? சுரேஷ் தாத்தா டிவிட்ட பாருங்க மக்களே! பிக்பாஸ் வீட்டில் ஆரியிடம் பேசியது என்ன? சுரேஷ் தாத்தா டிவிட்ட பாருங்க மக்களே!

    எப்படி கழுவி ஊற்றுகிறார்கள்?

    எப்படி கழுவி ஊற்றுகிறார்கள்?

    வந்த ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் உள்ளே இருந்த ஃபைனலிஸ்ட்டுகளிடம் வெளியில் நடக்கும் அனைத்தையும் கூறினர். யாரை எப்படி ட்ரோல் செய்கிறார்கள்? என்னவெல்லாம் சொல்லி கழுவி ஊற்றுகிறார்கள் என்பதை தெளிவாக கூறினர்.

    கடுகு போட்டால் பொறிந்துவிடும்

    கடுகு போட்டால் பொறிந்துவிடும்

    இதனால் வெக்ஸான ஹவுஸ்மேட்ஸ் முகத்தில் சிரிப்பே இல்லாமல் ரொம்பவே சோகமாய் இருந்தனர். அதிலும் ரியோ மற்றும் பாலாஜியின் முகத்தில் கடுகு போட்டால் பொறிந்துவிடும் அந்த அளவுக்கு கடுகடுவென இருந்தனர்.

    எது உங்களை பாதித்தது?

    எது உங்களை பாதித்தது?

    இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பேசிய கமல் ஏன் எல்லோரும் காற்றுப் போன பலூன் போன்று இருக்கிறீர்கள்? உள்ளே வந்தவர்கள் கூறியதில் உங்களை எது ரொம்ப பாதித்தது என்றார்.

    சிரிப்பே ஃபேக்குன்னு சொல்லிட்டாங்க..

    சிரிப்பே ஃபேக்குன்னு சொல்லிட்டாங்க..

    அதற்கு பதில் கூறிய ரம்யா பாண்டியன், சிரிப்பே ஃபேக்குன்னு சொல்லிட்டாங்களாம் அது ரொம்ப கஷ்டமாயிடுச்சு. இங்க வந்தப்போ நிறைய லவ் இருந்துச்சு.. இது ரிஸ்க்குன்னு தெரிஞ்சுதான் வந்தேன். இருந்தாலும் வெளியில் சொன்னதை கேட்ட பிறகு கவலையாயிடுச்சு என்றார்.

    டிஸ்டன்ஸ் மெயிண்டைன் பண்ணாங்க

    டிஸ்டன்ஸ் மெயிண்டைன் பண்ணாங்க

    அடுத்து பேசிய பாலாஜி, நான் இப்படி கோபப்பட்டு 5 வருஷம் ஆயிடுச்சு. இங்க கோபப்பட்டது பார்த்து தப்பா எடை போட்டுட்டாங்களோன்னு தோனுது. இந்த வீட்டுல நிறைய நல்ல விஷயம் பண்ணியிருக்கேன். அது தெரியாம போயிடுச்சோன்னு தோனுது. இந்த வீட்டுக்குள்ள திரும்ப வந்த
    நிறைய பேர் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணாங்க. பழைய மாதிரி பேசல. என்கிட்ட உள்ள கெட்டது எல்லாத்தையும் இங்கேயே விட்டுட்டு தான் போவேன் என்றார்.

    உங்க மனைவி வந்தபோதும்..

    உங்க மனைவி வந்தபோதும்..

    அடுத்து ஆரியிடம் பேசிய கமல், நான் உங்கக்கிட்ட எதையும் கேட்கல. நீங்களே என்கிட்ட எதையும் சொல்லாதீங்கன்னு ஒரு கேட் போட்டுட்டீங்க.. உங்க மனைவி வந்தப்போதும் இதைத்தான் சொன்னீங்க.. இப்போ மற்ற ஹவுஸ்மேட்ஸ் வந்த போதும் அதைத்தான் சொன்னீங்க என்றார் கமல்.

    கண்ணோட்டம் மாறிவிடும்

    கண்ணோட்டம் மாறிவிடும்

    அதற்கு பதில் கூறிய ஆரி, ஆமாம் சார், வெளியே நடப்பதை எனக்கு கூறினால் நான் இவர்களை பார்க்கும் கண்ணோட்டம் மாறிவிடுமோ என்ற அச்சம் இருந்தது. நான் என் விளையாட்டை நேர்மையாக விளையாடி முடிக்க வேண்டும் என்று நினைத்தேன் அதனால் தான் யாரிடம் எதுவும் கேட்கவில்லை. காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பார்கள் அதுபோல் வரும் விமர்சனங்களை ஏற்கவேண்டும். உங்கள் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வு விமர்சனங்கள் எவ்வளவோ பார்த்திருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைதான் எங்களுக்கு பாடம் என்று கமலிடம் கூறினார்.

    பார்க்க பிடிக்கவே இல்லை

    பார்க்க பிடிக்கவே இல்லை

    ஆரி பேசியதை கேட்டு பாராட்டிய கமல், மற்ற ஹவுஸ்மேட்டுகளை நீங்கள் காத்துபோன பலூன் போன்று இருக்கிறீர்கள். இதிலிருந்து வெளியே வாங்க, உங்களை பார்க்க பிடிக்கவே இல்லை. வெளியே வந்தால் நிச்சயம் சந்தோஷபடுவீர்கள் என்று அறிவுரை கூறினார்.

    English summary
    Kamal asked housemates which one affected you from house mates told. House mates revealed to Kamal which one affected them much.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X