ஹீரோ டூ வில்லன்? எந்த ரோலாக இருந்தாலும் அதில் ஜெயிக்கணும்.. வினய் பேட்டி!

சென்னை: மலையாளத் திரைப்படமான ஐடென்டிட்டி திரைப்படம் இந்த வாரம் வெளியானது. இப்படத்தில், டொவினோ தாமஸ், திரிஷா, வினய், ஷம்மி திலகன், அஜு வர்கீஸ், அர்ச்சனா ரவி, கோபிகா ரமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்தது குறித்து வினய் பேட்டி அளித்துள்ளார்.

க்ரைம் திரில்லர் பாணியில் உருவான இப்படத்தை இயக்குனர்கள் அகில் பால், அனஸ் கான் எழுதி இயக்கி,ராஜு மல்லியத் தயாரித்துள்ளார். பெண்கள் உடை மாற்றும் டிரையல் ரூமில் கேமராவை வைத்து ஒருவன் ரெக்கார்டு செய்து, அந்த வீடியோவை வைத்து, அந்த பெண்களை பிளாக் மெயில் செய்வதை வேலையாக வைத்து இருக்கிறான். திடீரென ஒரு நாள், அவனை யாரோ கொன்றுவிட்டு அவன் வைத்து இருந்த அனைத்து வீடியோக்களையும் அழித்து விடுகின்றனர். அந்த கொலையை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரியாக வினய் வருகிறார்.

vinay rai interview

இந்த ஆண்டின் முதல் வெற்றி: இந்த கொலையை நேரில் பார்த்த ஒரே சாட்சியான திரிஷா, இந்த கொலைக்கு உதவுவதற்காக கொலையாளியின் அங்க அடையாளங்களை சொல்லி படம் வரைகிறார்கள். கடைசியில் அந்த உருவம் டோவினோ தாமஸ் போல இருக்கிறது. அந்த கொலையை செய்தது யார்? அந்த கொலைக்கும் வினய்க்கும் என்ன தொடர்பு என்பது தான் படத்தின் கதை. ஐடென்டிட்டி படம் வெளியான 5 நாட்களில் ரூ. 24 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் மலையாள சினிமாவிற்கு சிறப்பான ஆண்டாக இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக முதல் வெற்றியை ஐடென்டிட்டி படம் பதிவு செய்துள்ளது.

நடிகர் வினய்: இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள வினய் வழக்கமான வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த வகையில் இந்த படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். உன்னாலே உன்னாலே படத்தில் அழகான சாக்லேட் பாயாக நடித்து பெண்களின் மனதில் இடம் பிடித்த வினய். துப்பறிவாளன் படத்திற்கு பிறகு தொடர்ந்து அதிரடியான வில்லனாக நடித்து வருகிறது. இதுகுறித்து பேசிய வினய்.

சாக்லேட் பாய்: சாக்லேட் பாய்ல இருந்து பயங்கரமான வில்லனாக எப்படி மாறுனீங்க என்று அனைவரும் கேட்கின்றனர். நான் என்ன சொல்கிறேன் என்றால், கொடுக்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறது தான் என்னுடைய வேலை. ஹீரோ கேரக்டர் கொடுத்தா அந்த கேரக்டர்ல சிறப்பா நடிப்பேன். வில்லன் கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டர்ல சிறப்பாக நடிப்பேன். காதல் காட்சி-ல் நடங்கன்னு சொன்னாலும் அதுலயும் சிறப்பாக பண்ணுவேன் அதுதான் என்னுடைய வேலை. நான் ஒரு படம் முடிந்த உடனே அதிலிருந்து முழுமையாக வெளியேறி விடுவேன். இப்போ நிறைய படத்தில் வில்லனாக நடிப்பதால் அதேபோன்ற கதாபாத்திரத்திலேயே தொடர்ந்து நடிச்சிட்டு இருக்கேன் என்று வினய் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X