twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்.ஜி.ஆர் டூ சிம்பு: போலீஸ் வேடத்தில் அசத்திய தமிழ் ஹீரோக்கள்…

    By Mayura Akilan
    |

    தமிழ் சினிமாவில் எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்தாலும் காவல்துறை அதிகாரியாக ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்று அனைவருமே ஆசைப்படுவார்கள்.

    எம்.ஜி.ஆர் தொடங்கி சிம்பு வரை பல நடிகர்கள் காக்கிச் சட்டை போட்டு நடித்திருப்பார்கள். சிலருக்கு காக்கி உடை பொருத்தமானதாக இருக்கும். சிலருக்கோ காமெடியாக இருக்கும்.

    தமிழ் சினிமா கதாநாயகர்களில் காக்கிச் சட்டை உடையில் அசத்திய நடிகர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

    எம்.ஜி.ஆர்

    எம்.ஜி.ஆர்

    அவசர போலீஸ், ரகசிய போலீஸ், சிஐடி என பல போலீஸ் வேடங்கள் போட்டு அசத்தியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

    சிவாஜி

    சிவாஜி

    காவல்துறை அதிகாரி வேடத்தில் சிவாஜி நடித்த தங்கப்பதக்கம் இன்றைக்கும் கூட ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் படமாக உள்ளது.

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியனை அத்தனை சீக்கிரத்தில் யாராலும் மறக்க முடியாது.

    கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    காக்கிச் சட்டை தொடங்கி அழகான போலீசாக அசத்தியவர் கமல்ஹாசன்.

    விஜயகாந்த்

    விஜயகாந்த்

    ஊமை விழிகள் தொடங்கிய காக்கிச் சட்டை கதாபாத்திரம் பல படங்களில் விஜயகாந்தை தொடர்ந்து இதில் சில படங்கள் சறுக்கினாலும் பல படங்கள் வெற்றி பெற்றன.

    சத்தியராஜ்

    சத்தியராஜ்

    காவல்துறை அதிகாரியாக விரைப்பாக சத்தியராஜ் நடித்த படம் வால்டர் வெற்றிவேல் போலீஸ் கதாபாத்திரம் படத்தில் வெற்றியை தொட்ட படம்.

    விக்ரம்

    விக்ரம்

    சாமி படத்தில் விக்ரமின் போலீஸ் கதாபாத்திரம் போலீஸ் அதிகாரிகளையே கவர்ந்துள்ளதாம்.

    அர்ஜூன்

    அர்ஜூன்

    சங்கர் குரு, ஜெய்ஹிந்த் உள்ளிட்ட பல படங்களில் காக்கிச் சட்டை வேடம் அணிந்து தேசத்தைக் காப்பாற்ற அவதாரம் எடுத்தவர் அர்ஜூன். பல படங்களில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்ததை ஏற்றுக் கொண்டனர்.

    சரத்குமார்

    சரத்குமார்

    கம்பீரமாய் காக்கிச் சட்டையில் உலா வரும் சரத்குமார் போலீஸ் அதிகாரி வேடத்திற்கு பொருத்தமானவர்தான் என்கின்றனர் ரசிகர்கள்.

    அஜீத்

    அஜீத்

    ஆஞ்சநேயா படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார் அஜீத். அவரது உடலமைப்புக்கு ஃபிட் ஆன காக்கி உடை கடைசியில் வெற்றி பெறவில்லை.

    சூர்யா

    சூர்யா

    காக்க காக்க படத்தில் காக்கிச் சட்டையில் அசத்தலாக நடித்திருப்பார் சூர்யா. என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்றால் என்ன என்பதை இந்த படத்தில் சூர்யா உணர்ந்து நடித்திருப்பார். சிங்கம் படத்தில் லோக்கல் இன்ஸ்பெக்டர் வேடம் கொஞ்சம் வேகமாக இருக்கும்.

    விஜய்

    விஜய்

    விஜய் உடலமைப்புக்கு போலீஸ் உடை கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் போக்கிரி படத்தில் கடைசி சில காட்சிகளில் மட்டுமே போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார் விஜய். நல்லவேளை மக்கள் தப்பித்தார்கள்.

    கார்த்தி

    கார்த்தி

    சிங்கத்தில் அண்ணன் போலீஸ் என்றால் சிறுத்தையில் முறுக்கிய மீசையும், கொஞ்சம் கூட குறையாமல் காக்கிச் சட்டையில் அசத்தியிருப்பார் கார்த்தி.

    சிம்பு

    சிம்பு

    ஒஸ்தி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார் சிம்பு. ஆனால் போலீசிற்கு உரிய இலக்கணங்கள் கொஞ்சம் கூட அதில் இல்லை என்பதால்தான் அந்தப் படம் மக்களை சென்றடையவில்லை.

    விஷால்

    விஷால்

    சத்யம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார் விஷால், அவரது உடலமைப்பிற்கு காக்கிச் சட்டை பொருத்தமானதாக இருந்தாலும் கடைசியில் படம் ஏனோ வெற்றிபெறவில்லை.

    சிரிப்பு போலீஸ்கள்

    சிரிப்பு போலீஸ்கள்

    காவல்துறை அதிகாரிகளை உயர்த்தி எடுக்கப்படும் அதே நேரத்தில்தான் கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம் என காமெடியன்களை வைத்து சிரிப்பு போலீசையும் உருவாக்கியிருப்பார்கள்.

    English summary
    Police avatar in Tamil Cinema hero’s. Which hero suit for police character in Tamil Cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X