For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அர்ச்சனா கேங்கில் இணைந்த பாலா.. தங்கமே உன்னைத்தான் தேடிவந்தேன் டாஸ்க்கில் ஜெயிச்சது யார்?

    |

    சென்னை: கேம் ஆடுறதுல்ல அர்ச்சனா அக்காவை அசைச்சிக்க முடியாது. அவங்க வந்ததுக்கு அப்புறம் மொட்டை தாத்தா ஆட்டம் அப்படியே அடங்கிப் போச்சே..

    தங்கமே உன்னைத் தான் தேடி வந்தேன் டாஸ்க்கில் அதிக தங்கங்களை யார் எடுத்தா என பிக் பாஸ் கன்ஃபெஷன் ரூமில் தராசில் எடை பார்த்து கணித்துக் கொண்டார்.

    பின்னர், 16 பேர் இருக்க டீமை 3 குழுவா பிரிஞ்சு எந்த குழு கிட்ட அதிக தங்கம் இருக்குதோ அவங்களுக்கு தனி பவர் கிடைக்கும் என்றார்.

    தங்கத்தை எடை போட்ட பிக் பாஸ்

    தங்கத்தை எடை போட்ட பிக் பாஸ்

    தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேனே டாஸ்க்கில் யார் யாரெல்லாம் அதிக தங்கம் சேர்த்தார்களோ, அதனை கன்ஃபெஷன் ரூமில் வைத்து பிக் பாஸ் எடை போட வைத்துப் பார்த்தார். ஒரு டாஸ்க் வச்சாலே அதன் கூடவே வில்லங்கம் ஒன்றும் இருக்கும் என்பது பிக் பாஸ் வீட்டின் எழுதப்படாத விதி, இந்த டாஸ்க்கில் என்ன வில்லங்கம் வரப்போகிறதோ என ரசிகர்கள் ஆவலுடன் அதை பார்த்தனர்.

    பாலாவிடம் தான் அதிக தங்கம்

    பாலாவிடம் தான் அதிக தங்கம்

    இந்த வாரம் பாலாவை ஹைலைட் பண்ண ஆரம்பித்து விட்டார் பிக் பாஸ். இந்த தங்க வேட்டை டாஸ்க்கிலும் அவரிடம் தான் அதிகப்படியாக 3 கிலோவுக்கு மேல் தங்கம் இருந்தது. கேபி, ரம்யவிடம் 2 கிலோவுக்கு மேலும், அர்ச்சனா, வேல், சோம்ஸ், ரியோ, ஆஜித்திடம் ஒரு கிலோவுக்கு அதிகமாகவும் மற்றவர்களிடம் ஒரு கிலோவுக்கும் குறைவாகவும் தங்கம் இருந்தது.

    டீம் பிரிப்பதில் பிரச்சனை

    டீம் பிரிப்பதில் பிரச்சனை

    அதிகப்படியாக 8 பேர் ஒரு டீமில் இருக்கலாம் என பிக் பாஸ் சொன்னது தான் மிச்சம், அர்ச்சனா அக்கா தனது அடிமை கூட்டங்களை ஒன்றாக சேர்த்துக் கொண்டு 8 பேர் நாங்க டீம் என சொல்ல ஆரம்பித்தார். ஆனால், பாலா விட வில்லை. அதெல்லாம் முடியாது. 5, 5, 6 என இருந்தால் தான் அது நல்ல ஆட்டமாக இருக்கும் என அங்கேயும் ஒரு பிரச்சனை வெடித்தது.

    அணி மாறிய பாலா

    அணி மாறிய பாலா

    சனம் ஷெட்டி, பாலா ப்ளீஸ் பாலா என்னை உன்னோட டீம்ல சேர்த்துக்கோன்னு ரொம்ப கெஞ்சியும், அவரை கழட்டி விட்டு விட்டு, நல்லா டீம் பிரிக்கிறேன், அர்ச்சனா அக்கா டீம் பலத்தை உடைக்கிறேன்னு பேசிவிட்டு, கடைசியில் அவரே அர்ச்சனா அக்கா டீமில் இணைந்து கொண்டார். அதிகம் பேர் உள்ள அந்த டீம் தான் ஜெயித்தது.

    அரச குடும்பம்

    அரச குடும்பம்

    நான் வேற டீம் போறேன், நான் தோற்க விரும்பலை என மொட்டை தல சுரேஷ் தாத்தாவிடம் சொல்லிவிட்டு அர்ச்சனா அணியில் சேர்ந்து கொண்டார் பாலா. 7 பேர் உள்ள அந்த அணியிடம் மொத்தம் 12.751 கிலோ தங்கம் இருக்க அந்த அணி வெற்றி பெற்ற அணியென்றும், அவர்கள் இனி அரச குடும்பம் என்றும் பிக் பாஸ் அறிவித்தார்.

    வேலை செய்ய வேண்டாம்

    வேலை செய்ய வேண்டாம்

    பாலா வீட்டை பெருக்கவில்லை என சண்டை வெடித்த நிலையில், பாலா, அர்ச்சனா, ரியோ, வேல்முருகன், சம்யுக்தா, சோம்ஸ் ரமேஷ் இருக்கும் அந்த அணி வீட்டில் எந்த வேலையையும் செய்ய வேண்டாம் என்றும், அவர்களுக்கு மற்ற இரு அணியினரும் பணிவிடைகள் செய்ய வேண்டும் என்றும் பிக் பாஸ் கட்டளையிட்டார்.

    பிக் பாஸை எதிர்த்த நிஷா

    பிக் பாஸை எதிர்த்த நிஷா

    அர்ச்சனா அக்கா உடனே யார் என் முதுகை தேச்சி விடப் போறா என்று கேட்டதும், டென்ஷனான நிஷா அக்கா பிக் பாஸ் அவங்க எங்கள முதுகை எல்லாம் தேச்சி விட சொல்றாங்க, இது ரொம்ப ஓவர் பிக் பாஸ். இதை ஒத்துக் கொள்ளவே முடியாது என பிக் பாஸையே எதிர்த்து குரல் கொடுத்தார்.

    நம்ம பிரச்சனை நமக்கு

    நம்ம பிரச்சனை நமக்கு

    5 மற்றும் 4 என இரு அணிகளாக இருக்கும் 9 பேரில், யாராவது தூங்கினா, இங்க இருக்க யாரும் எழுப்பி வேலை வாங்க கூடாது என பாலாஜி முருகதாஸ், நம்ம பிரச்சனை நமக்கு என முதல் ஆளாக தனது விதியை வகுத்தார். உடனே சுரேஷ் தாத்தாவும், அர்ச்சனாவும் சூப்பர் சூப்பர் என வெட்கமே இல்லாமல் கை தட்டினார்கள். இன்னும் என்னலாம் அட்டகாசம் நடக்கப் போகுதோ!

    English summary
    Balaji Murugadoss put a great plan and joined Archana’s big team and won the gold task and bought extra rule from bigg boss.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X