Aishwarya Rai - ஐஸ்வர்யா ராய்க்கு ரத்தம்.. கண்டுகொள்ளாத மணிரத்னம் - பொன்னியின் செல்வனில் நடந்தது என்ன?

சென்னை: Aishwarya Rai (ஐஸ்வர்யா ராய்) பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தபோது நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு ரத்தம் வந்ததாகவும் அதனை மணிரத்னம் கண்டுகொள்ளவில்லை என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக சுருக்கி மணிரத்னம் திரைப்படமாக எடுத்தார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சோபிதா, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

while acting in Ponniyin Selvan actress Aishwarya Rai bled and Mani Ratnam did not notice it

பொன்னியின் செல்வன் 2: இதனையடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது. முதல் பாகம் பெற்ற வெற்றியை அடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் வெளியானது. ரசிகர்களும் குடும்பத்தோடு திரையரங்குக்கு படை எடுத்து சென்று படத்தை பார்த்தனர். படத்தை பார்த்த ரசிகர்களில் பெரும்பாலானோருக்கு படம் திருப்தி தரவில்லை என்ற கருத்தே நிலவியது.

வரலாற்றை மாற்றிய மணிரத்னம்?: குறிப்பாக நாவலில் ஆதித்த கரிகாலன் கொல்லப்படுவதாக எழுதப்பட்டிருந்த சூழலில் மணிரத்னமோ ஆதித்ய கரிகாலன் தற்கொலை செய்துகொண்டதுபோல் காட்சிப்படுத்தியிருக்கிறார் என்று விமர்சனம் எழுந்தது. மேலும் படத்தின் வசூலும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதுவரை 400 கோடி ரூபாயைத்தான் பொன்னியின் செல்வன் 2 வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

while acting in Ponniyin Selvan actress Aishwarya Rai bled and Mani Ratnam did not notice it

புனைவு கதாபாத்திரம் நந்தினி: பொன்னியின் செல்வன் நாவலில் முக்கியமான கதாபாத்திரமாக நந்தினியை உருவாக்கியிருப்பார் கல்கி. வரலாற்றில் அப்படி ஒரு கேரக்டர் இல்லை என்றாலும் நாவலை சுவாரஸ்யப்படுத்துவதற்காக அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியிருந்தார். எனவே படமாக எடுக்கும்போது யார் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பை பார்த்து ரசிகர்கள் திருப்தி அடைந்தன.

நந்தினியாக கலக்கிய ஐஸ்வர்யா ராய்: முதல் பாகத்தில் கொஞ்சமே ஐஸ்வர்யா ராய்க்கு காட்சிகள் இருந்தாலும் இரண்டாம் பாகத்தில் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஐஸ்வர்யா ராயும், தனது நடிப்பின் மூலம் அனைவரையும் மிரள வைத்துவிட்டார். பார்வையில் பரிதாபம், வெகுளித்தனம், சிந்தனையில் பழிவாங்கும் எண்ணம் என தனது நடிப்பால் அந்தக் கதாபாத்திரத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றிருந்தார் ஐஸ்வர்யா ராய்.

காதில் ரத்தம்: இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தபோது ஐஸ்வர்யா ராய்க்கு காதிலிருந்து ரத்தம் வந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, அரச குல பெண் கதாபாத்திரம் என்பதால் அவருக்கு அளவில் அதிகமான தோடுகள் கொடுக்கப்பட்டன. ஆனால் அதுவரை அவ்வளவு பெரிய தோடுகளை அவர் அணிந்ததில்லை. எனவே காதில் அந்த தோடுகளை மாட்ட மாட்ட ஒருகட்டத்தில் காயமாகி ரத்தம் வந்துவிட்டதாம். இதனை உதவி இயக்குநர்களும் மணிரத்னத்திடம் சொல்லவில்லையாம்.

மேலும், தோடுகளே அணிய முடியாத சூழலும் உருவாகியிருக்கிறது. இதனை ஒருவழியாக தெரிந்துகொண்ட மணிரத்னம், ஒருபக்கம் காது தெரியாதபடி ஐஸ்வர்யா ராயின் கூந்தலை வைத்து காதை மறைத்து ஷூட்டிங்கை நடத்தினார் என தகவல் வெளியாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X