Actor Arnaav : ஈகோவை தூக்கிப்போடுங்க.. குழந்தையை பாருங்க.. அர்னவுக்கு ரசிகர்கள் அட்வைஸ்!
சென்னை : சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு பெண்குழந்தை பிறந்துள்ள நிலையில், நெட்டிசன்ஸ் பலர் ஈகோவை தூக்கிப்போட்டுவிட்டு குழந்தையை பாருங்க என அர்னவுக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.
கேளடி கண்மணி சீரியல் மூலம் பிரபலமான திவ்யா ஸ்ரீதர் தன்னுடன் இணைந்து நடித்த அர்னவை காதலித்து வந்தார். 5 வருடங்களாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்
திருமண போட்டோ வெளியிட்டு கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை திவ்யா ஸ்ரீதர் தெரிவித்ததை அடுத்து, திவ்யாவுக்கும் அர்னவுக்கும் பிரச்சனை உருவானது.

திவ்யா ஸ்ரீதர், அர்னவ் : 5 ஆண்டுகளாக விழுந்து விழுந்து காதலித்து வந்த திவ்யா மற்றும் அர்னவ் ஜோடி குடும்ப சண்டையை வீதிக்கு இழுத்து வந்து மாறி மாறி குற்றம்சாட்டிக் கொண்டனர். கணவர் துன்புறுத்தி அடிப்பதாகவும், வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் முதலில் மீடியா முன் தனது காதல் கணவர் குறித்து அடுக்கடுக்கான புகாரை கூறினார் திவ்யா.
திருமணமானதை மறைத்தார் : இதையடுத்து, திவ்யா கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்த அர்னவ், நான் திவ்யாவை அடிக்கவில்லை அவர் தான் என்னை அடித்தார் என்று போட்டோ ஆதாரங்களை காட்டினார். நாங்கள் காதலித்தது சேர்ந்து வாழ்ந்தது எல்லாம் உண்மை தான். அவருக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பது எனக்குத் தெரியாது என்று இருந்தார். இதையடுத்து, நடிகர் அர்னவை போலீசார் கைது செய்தனர்.

அழகான பெண் குழந்தை : இந்நிலையில், நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையின் கையை பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட திவ்யா, இந்த நீண்ட நாள் காத்திருப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது, என்ன நடந்தது என்பதற்காக அல்ல, என்ன நடக்கப் போகிறது என்பதற்காக. நீங்கள் கொடுத்த உந்துதல், ஆதரவு, சக்தி, அன்பு, வலிமை நிபந்தனையற்றது. என்னில் நீங்கள் ஒரு அங்கமாக இருப்பதற்கு நன்றி, நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று பதிவிட்டிருந்தார்.

மனம் வலிக்கிறது : திவ்யா ஸ்ரீதருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், நடிகர் அர்னவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உங்கள் இதயம் உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, ஆனால் உண்மை எது என்று உங்கள் மூளைக்கு தெரியும். சில வலிகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத போது அதன் வலி அதிகரிக்கிறது என்று பதிவிட்டு இருந்தார்.
ஈகோவை தூக்கிப்போடுங்க : இந்த பதிவினைப் பார்த்த நெட்டிசன்ஸ், அர்னவ் அண்ணா பாப்பாவை பாருங்க என்றும், உங்க பெண்ணைப் போய் பாருங்க, அப்பா இல்லாத குழந்தையாகிவிடக்கூடாது, எல்லாத்தையும் மறந்து ஈகோவை தூக்கிப்போட்டு விட்டு, குழந்தைக்காக மனைவியுடன் சேர்ந்து வாழுங்கள், எல்லாம் சரி ஆகிவிடும் என்று பலரும் அர்னவுக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











