விஜய்யின் கோட்.. நேத்துத்தான் ரிலீஸ்.. அதுக்குள்ள இப்படியா?

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக கோட் திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் கோட் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றநிலையில் கோட் படத்தை பார்க்க வராமல் வெறுச்சோடிய தியேட்டரால் கோட் படக்குழு சோகத்தில் இருக்கிறது.

தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி உள்ள விஜய், முழு நேர மக்கள் பணியில் ஈடுபடவுள்ள விஜய், விரைவில் சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ளார். இதனால், ரசிகர்கள் மத்தியில் 'தி கோட்' படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே உச்சத்தில் இருந்தது. இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கிய நிலையில், படத்தில் சினேகா, லைகா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், பிரேம்ஜி, வைபவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

goat vijay

கொண்டாடிய ரசிகர்கள்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் நேற்று காலை கேரளாவில் அதிகாலை 4 மணிக்கும், கர்நாடகாவில் காலை 6 மணிக்கும் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. ஆனால், தமிழகத்தில் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது'தி கோட்' படத்தின் ரிலீஸை விஜய் ரசிகர்கள் ஆடல், பாடல், பட்டாசு, பாலபிஷேகம் என திருவிழாப்போல ரசிகர்கள் கொண்டாடினர். தமிழகத்தில் மட்டும் மொத்தம் கோட் திரைப்படம் 1,100 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 4ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் வெளியானது.

முதல் நாள் வசூல்: பான் இந்திய திரைப்படமாக தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் படம் வெளியரன நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், 'கோட்' படம் முதல் நாளில் ரூ.126.32 கோடி வசூலித்து சாதனை புரிந்துள்ளது. முதல் நாளில் இவ்வளவு பெரிய தொகையை விஜயின் படம் வசூலித்து தமிழ் சினிமாவில் சாதனை புரிந்துள்ளது. இதனை தளபதியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்கள் கவலை: சென்னையில் இன்னும் மூன்று நாட்களுக்கான படத்தின் டிக்கெட்டுகள் மொத்தமாக விற்றுத் தீர்ந்து விட்ட நிலையில், படம் வெளியான இரண்டாம் நாளில் ஒருசில தியேட்டர்களில் காலி இடங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மல்லசமுத்திரம் பகுதியில் இருக்கும் ஒரு தியேட்டரில் இன்றைய காட்சிகளில் ஒருசில டிக்கெட்கள் மட்டுமே விற்றுள்ளனர். படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருக்கும் போது, அந்த பகுதியில் கோட் படத்தை பார்க்க வராமல் வெறுச்சோடிய தியேட்டரால் விஜய் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X