Vijay In Kerala - அய்யய்யோ இது என்ன விபரீதம்.. கேரளாவில் நொறுங்கிய விஜய்யின் கார்?.. ட்ரெண்டாகும் வீடியோ

திருவனந்தபுரம்: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருக்கிறார். அதற்கு பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலில் முழு கவனம் செலுத்தவிருக்கும் அவர் தற்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. க்ளைமேக்ஸ் ஷூட்டிங்கிற்காக சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு கேரளாவுக்கு சென்றிருக்கிறார் தளபதி. அவரை வரவேற்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் குழுமியிருந்தனர்.

டாப் நடிகர்களில் ஒருவரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்று கடந்த சில வருடங்களாகவே பலமாக பேச்சு ஓடிகொண்டிருந்தது. எந்த அலப்பறையும் போடாமல் அரசியல் கட்சி ஆரம்பித்த விஷயத்தை சிம்ப்பிளாக ட்விட்டரில் அறிவித்துவிட்டார் விஜய். மேலும் மக்கள் பணியில் ஈடுபடவிருப்பதால் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்றும் கூறிவிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் சோகமடைந்திருக்கின்றனர்.

While visiting Kerala Vijays car was damaged in a crowd of fans

GOAT: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடிக்க கமிட்டானார். இதில் அவருடன் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், யோகிபாபு, பிரேம்ஜி, சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இப்போதே நிலவிவருகிறது.

மும்முரமடைந்த ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கி தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. வெங்கட் பிரபு எப்போதும் வித்தியாசமான முறையில் மேக்கிங் செய்வார் என்பதால் இதில் எந்த மாதிரியான மேக்கிங்கை கையாண்டிருக்கிறார் என்பதை பார்க்க ஆவலோடு இருக்கிறார்கள் ரசிகர்கள். அஜித்துக்கு எப்படி மங்காத்தா படத்தை மெகா ஹிட்டாக கொடுத்தாரோ அதேபோல் GOAT படத்தையும் மெகா ஹிட்டாக கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

க்ளைமேக்ஸ் ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எப்போதும் பக்காவாக பிளான் போட்டு வேலை செய்யும் வெங்கட் பிரபு; இதில் கூடுதல் வேகம் காட்டியிருக்கிறார். இதனால் விஜய்யே இம்ப்ரெஸ் ஆகிவிட்டதாகவும் ஒரு தகவல் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங்கை இலங்கையில் நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் சூழலில் இலங்கைக்கு சென்றால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று விஜய் இலங்கையில் ஷூட்டிங் நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

கேரளாவில் விஜய்: இதனையடுத்து கேரளாவில் க்ளைமேக்ஸ் ஷூட்டிங்கை நடத்த வெங்கட் பிரபு திட்டமிட்டார். அதன்படி விஜய் நேற்று கேரளா சென்றடைந்தார். தமிழ்நாட்டில் எப்படி விஜய்க்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ அதேபோல் கேரளாவிலும் இருக்கிறது. ஷூட்டிங்கிற்காக 14 வருடங்கள் கழித்து கேரளாவுக்கு விஜய் வருவதை அறிந்துகொண்ட ரசிகர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கூடினர். கேரள ஹீரோக்களுக்குக் கூட இல்லாத மாஸ் வரவேற்பு விஜய்க்கு கிடைத்தது.

நொறுங்கிய கார்: ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்து; விஜய் வெளியில் வரும்போது உற்சாக கூக்குரலிட்டனர். ஏர்போர்ட்டிலிருந்து தான் தங்கப்போகும் ஹோட்டலுக்கு விஜய் சென்றபோது வழி நெடுகிலும் கூட்டம் அலைமோதியது. இதனைப் பார்த்த கேரள திரையுலகம் கண்டிப்பாக பிரமித்துதான் போயிருக்கும். கறுப்பு கலர் காரில் விஜய் சென்றபோது கூட்ட நெரிசலில் அவரது கார் சிக்கியது. அதனால் காரின் முன் பகுதி, பின் பகுதி பலத்த சேதமடைந்தது. மேலும் காரின் சில கண்ணாடிகளும் நொறுங்கியுள்ளது. ரசிகர்களிடம் சிக்கி நொறுங்கிய விஜய்யின் கார் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X