யாருக்கெல்லாம் ஐஸ்கிரீம் வேணும் ஓடியாங்க... ரசிகர்களை ஏங்க விட்ட ஸ்ம்ருதி வெங்கட்!

சென்னை: இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் கலக்கிய இருந்த தடம் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஸ்ம்ருதி வெங்கட்

அசோக் செல்வனுக்கு ஜோடியாக மன்மதலீலை படத்தில் அடல்ட் காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்

பகையே காத்திரு,குற்றமே குற்றம், தேஜ வு உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ஸ்ம்ருதி வெங்கட் கையில் ஐஸ்கிரீம் உடன் உள்ள க்யூட் வீடியோ ரசிகர்களை உச்சுக் கொட்ட வைத்துள்ளது.

முதல்முறையாக இரட்டை வேடத்தில்

முதல்முறையாக இரட்டை வேடத்தில்

தமிழ் சினிமாவில் இப்போது ஆக்ஷன் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் தடம். இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் தமிழில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற நிலையில் தெலுங்கு மற்றும் இந்தி மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஸ்ம்ருதி வெங்கட் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.

ஆர்ஜே பாலாஜி மூத்த தங்கையாக

ஆர்ஜே பாலாஜி மூத்த தங்கையாக

மிகவும் அமைதியான பெண்ணாக நடித்த ஸ்ம்ருதி வெங்கட் ரசிகர்கள் மத்தியில் அந்த அளவுக்கு பிரபலம் அடையவில்லை. இந்த நிலையில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர்ஜே பாலாஜி மூத்த தங்கையாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களால் பாராட்டுக்களை பெற்ற ஸ்ம்ருதி வெங்கட் இப்பொழுது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மன்மத லீலையில் அடல்ட் காட்சிகளில்

மன்மத லீலையில் அடல்ட் காட்சிகளில்

தனுஷுக்கு தங்கையாக மாறன் படத்தில் நடித்த ஸ்ம்ருதி வெங்கட் தொடர்ந்து குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான மன்மத லீலையில் அடல்ட் காட்சிகளில் நடித்து ரசிகர்களை வியக்க வைத்தார். இப்பொழுது குற்றமே குற்றம் என்ற படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பு வெகுவாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அருள்நிதிக்கு ஜோடியாக தேஜவு படத்தில் கதாநாயகியாக வரும் இவர் அதேசமயம் பகையை காத்திரு என்ற படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்

ஐஸ்கிரீம் சாப்பிடும் க்யூட்

ஐஸ்கிரீம் சாப்பிடும் க்யூட்

பார்த்தவுடனேயே பிடித்து விடும் ஹோம்லியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ம்ருதி வெங்கட் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடும் க்யூட்டான வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஏக்கத்துடன் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X