சூடுபிடிக்கும் பிக்பாஸ் 5.. போட்டியாளர்கள் இவர்களா? தீவிர பேச்சு வார்த்தை.. தீயாய் பரவும் தகவல்!
சென்னை: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க பிரபலங்கள் சிலரிடம் பேச்சு வார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது.
இதில் இரண்டு வைல்டு கார்ட் போட்டியாளர்கள் உட்பட 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 105 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சி கடந்த ஜனவரி 17ஆம் தேதி நிறைவடைந்தது.

பிக்பாஸ் சீசன் 5
இதில் நடிகர் ஆரி அர்ஜூனன் டைட்டில் வின்னரானார். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் தாக்கமும், ரசிகர்களுக்குள் ஏற்பட்ட மோதலுமே இன்னும் குறைந்தபாடில்லை. அதற்குள் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடங்குவதற்கான வேலை ஆரம்பமாகி விட்டது.

பேச்சு வார்த்தை
பிக்பாஸ் சீசன் 5க்கான ப்ரி புரடெக்ஷன் வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாகவும் ஜூன் மாத இறுதியில் நிகழ்ச்சி தொடங்கும் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க சில போட்டியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீரெட்டி, சோனா
இதனிடையே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகைகள் ஸ்ரீரெட்டி, பூனம் பஜ்வா, ராய் லக்ஷ்மி, சோனா ஆகியோர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமாக அனைத்து சீசன்களிலும் இளம் நடிகைகள் பங்கேற்பது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் இவர்களை பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்து வரலாம் என கூறப்படுகிறது.

ராதா, லக்ஷ்மி ராமகிருஷ்ணன்
இதேபோல் நடுத்தர வயது நடிகை ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதும் வாடிக்கையாக உள்ள நிலையில் இம்முறை அந்த வாய்ப்பு நடிகை ராதா மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு வழங்கப்படலாம் என தெரிகிறது.

ராதா ரவி, பழ கருப்பையா?
இதேபோல் நடிகர்கள் அதர்வா மற்றும் சித்தார்த் ஆகியோரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் ராதா ரவி மற்றும் பழ கருப்பையா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்றும் கூறப்படுகிறது.

குக் வித் கோமாளி
மேலும் இம்முறை வழக்கம்போல சில விஜய் டிவி புராடெக்டுகளும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்றும் தெரிகிறது. அதன்படி பெரும்பாலும் குக் வித் கோமாளி போட்டியாளர்களே அதிகம் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

விஜய் டிவி புகழ்
அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அஷ்வின் மற்றும் ஷிவாங்கி ஆகியோர் பங்கேற்கலாம் என தெரிகிறது. மேலும் மற்றொரு விஜய் டிவி பிரபலமான புகழ் பங்கேற்கலாம் என்றும் கூறப்படுகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்தால் அதன் பிறகு அடுத்த வருடம் என்பதால் இந்த வாய்ப்பை பிரபலங்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











