67வது தேசிய திரைப்பட விருதுகளை வென்ற நட்சத்திரங்கள் யார் யார்? இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: 67 தேசிய விருது விழாவில் தேசிய திரைப்பட விருதுகளை வென்ற நட்சத்திரங்கள் யார் என்பது குறித்த தகவலை வீடியோவாக வழங்கியுள்ளார் பிகே.
தமிழ் சினிமாவில் நாள்தோறும் பல்வேறு சுவாரசிய சம்பவங்களும், பல்வேறு படங்களின் அப்டேட்டுகளும் வெளியாகி வருகிறது.

படத்தின் பூஜை, பாடல்கள் வெளியீடு, டீஸர், ட்ரெயிலர் என ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. அவற்றில் சுவாரசியமான தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.
அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், அண்மையில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது விழாவில் தேசிய விருதுகளை வென்ற முக்கிய நட்சத்திரங்கள் குறித்த தகவலை கூறியுள்ளார் பிகே. அதன்படி. பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான மரைக்காயர் படம் சிறந்த பத்திற்கான தேசிய விருது பெற்றுள்ளதை கூறியுள்ளார் பிகே.
சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான விருது அசுரன் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷ் மற்றும் இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.
இதேபோல் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கங்கனா ரனாவத்துக்கு ஜான்சிராணி படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த துணை நடிகருக்கான விருது, சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் சிறந்த குழந்தை நட்சத்திரத்திரத்திற்கான விருது நாக விஷாலுக்கு கேடி கருப்பு படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது விஸ்வாசம் படத்திற்காக டி இமானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல்
ஸ்பெஷல் ஜூரி அவார்டு ஒத்த செருப்பு படத்திற்காக நடிகர் பார்த்திபனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல்
நடிகர் ரஜினிகாந்துக்கு திரைத்துறையில் புரிந்த வாழ்நாள் சாதனைக்காக தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











