பிக்பாஸ் வீட்டில் இந்தவாரம் நாமினேஷன் ஆனவர்கள் இவர்கள்தான்.. யாரை தூக்கப்போறாங்களோ!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் புராசஸில் அர்ச்சனா, பாலாஜி உட்பட 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் நாமினேஷன் நடைபெறுவது வழக்கம்.

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் தங்களுக்கு ஆகாத போட்டியாளர்களை சக போட்டியாளர்கள் வெளியேற்றுவதற்காக நாமினேஷன் நடைபெற்று வருகிறது.

கன்ஃபெஷன் ரூமில்

கன்ஃபெஷன் ரூமில்

அந்த வகையில் இன்றும் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. கடந்த வாரம் போல் போட்டோக்களை தீயில் போட்டு கொளுத்தாமல், வழக்கம் போல் கன்ஃபெஷன் ரூமில் நாமினேட் செய்கின்றனர்.

சம்யுக்தா, சுச்சி எஸ்கேப்

சம்யுக்தா, சுச்சி எஸ்கேப்

இந்த வாரம் சம்யுக்தா வீட்டின் கேப்டன் என்பதால் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது. இதேபோல் சுசித்ரா நேற்றுதான் என்ட்ரி கொடுத்தார் என்பதால் அவரையும் நாமினேட் செய்ய முடியாது.

ஆரிதான் டாப்பர்

ஆரிதான் டாப்பர்

இந்நிலையில் இன்று நடைபெற்ற நாமினேஷன் புராசஸில் மொத்தம் 7 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். இதில் அதிகளவாக ஆரி 8 ஓட்டுகளை பெற்று நாமினேஷன் லிஸ்ட்டில் டாப்பர் ஆனார். அர்ச்சனா, பாலாஜி, ஷிவானி, சோம் சேகர், சம்யுக்தா உள்ளிட்டோர் நாமினேட் செய்தனர்.

வாயை மட்டுமே நம்பி

வாயை மட்டுமே நம்பி

ஆரியை நாமினேட் செய்த பாலாஜி, அவர் வாயை மட்டுமே நம்பி வந்த ஒரு ஆள் மாதிரி இருப்பதாக கூறினார். அவரை தொடர்ந்து பாலாஜி, சனம் ஷெட்டி, அர்ச்சனா ஆகியோர் தலா 4 ஓட்டுகளை பெற்று நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர்.

சுச்சி செய்த நாமினேஷன்

சுச்சி செய்த நாமினேஷன்

அவர்களை தொடர்ந்து சோம் சேகரும் 3 ஓட்டுகளையும், சுரேஷ் சக்கரவர்த்தி 2 ஓட்டுகளையும் பெற்று நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர். புதிதாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சுச்சியும் இருவரை நாமினேட் செய்துள்ளார்.

ஊசி வச்சுட்டார்..

ஊசி வச்சுட்டார்..

அர்ச்சனா மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தியை நாமினேட் செய்த சுச்சி, அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் டாமினேட் செய்வது தனக்கு பிடிக்கவில்லை என்றார். மேலும் சுரேஷ் சக்கரவர்த்தி, தனக்கு தக்காளி விவகாரத்தில் ஊசி வைத்துவிட்டதாகவும் ஷிவானி பாலாஜி குறித்து தான் பேசியதை தவறாக சொல்லியதாகவும் குற்றம் சாட்டினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X