வாவ்.. பிக்பாஸ் எவிக்ஷனில் இருந்து தப்பித்த அந்த 6 பேர்.. அவங்களும் இருக்காங்களாம்!
சென்னை: பிக்பாஸ் நாமினேஷனில் இடம் பெற்றிருந்த 11 பேரில் 6 பேர் சேவ்வாகி இருப்பதாக தகவடல வெளியாகியுள்ளது.
கடந்த 4 ஆம் தேதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது.
இதில் 17வது போட்டியாளராக வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தார் கொடுத்தார் அர்ச்சனா.

முதல் ஆளாய் ரேகா
இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது வாரத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்றதால் முதல் ஆளாய் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் நடிகை ரேகா.

எவிக்ஷன் ஃப்ரீ பாஸ்
கடந்த வாரம் ஆஜித் எவிக்ட்டானார். ஆனால் அவரிடம் எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் இருந்ததால் அதனை பயன்படுத்தி தப்பித்தார். இதையடுத்து இந்த வார நாமினேஷனில் பிக்பாஸ் போட்டியாளர்களில் மொத்தம் 16 பேர் இடம் பெற்றன.

நாளை ஒருவர்
சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் ஆகிய 11 பேரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் நாளை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்.

எரிச்சலாக்கும் சனம்
இந்நிலையில் இன்று சனம் ஷெட்டி சேவ்வாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லா பிரச்சனையிலும் மூக்கை நுழைந்து வரும் சனம் ஷெட்டி, முன்னால் ஒன்று பின்னால் ஒன்று என பேசி ஹவுஸ் மேட்ஸ் மட்டுமின்றி பார்வையாளர்களையும் எரிச்சல் படுத்தி வருகிறார்.

தப்பித்த 6 பேர்
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் முதல் ஆளாய் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். இதேபோல் பாலாஜி முருகதாஸ், ரியோ, ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், அனிதா சம்பத் ஆகிய 6 பேர் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும், அதுகுறித்த அறிவிப்பு இன்றைய எபிசோடில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

யார் ஒருவர்?
11 பேரில் 6 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் எஞ்சிய 5 பேரான, சுரேஷ் சக்கரவர்த்தி, சோம் சேகர், வேல்முருகன், ஆஜித், நிஷா ஆகிய 5 பேரில் ஒருவர் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து நாளை வெளியேற்றப்படுவார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











