யாருங்க நீங்க என்று ரஜினியிடம் ஏன் கேட்டேன் தெரியுமா?: இளைஞர் விளக்கம், வைரல் வீடியோ
Recommended Video

சென்னை: ரஜினியிடம் நான் ஏன் யாருங்க நீங்க என்று உரிமையுடன் கேட்டதை தவறாக புரிந்து கொண்டுவிட்டார்கள் என்று சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ரஜினிகாந்த் நேற்று முன்தினம் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது சந்தோஷ் என்கிற இளைஞர் ரஜினியை பார்த்து யாருங்க நீங்க என்று கேட்டார். அந்த வீடியோ வெளியாகி வைரலானது.

தூத்துக்குடி
இளைஞர் கேட்ட கேள்விக்கு நான் தான்பா ரஜினிகாந்த் என்று ரஜினி பதில் அளித்தார். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வர 100 நாட்கள் ஆனதா என்று அந்த இளைஞர் கேட்டதும் சிரித்துக் கொண்டே கிளம்பினார் ரஜினி.

ரஜினி
யாருங்க நீங்க என்று கேட்டது குறித்து அந்த இளைஞர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். ரஜினியிடம் உரிமையுடன் கேட்டதை மற்றவர்கள் தவறாக புரிந்து கொண்டுவிட்டதாக கூறுகிறார்.

போராட்டம்
நான் சொன்ன நோக்கமே வேறு. ஆனால் மீடியாவும், டிரோல் பண்ணுகிறவர்களும் வேறு மாதிரி எடுத்துக் கொண்டுள்ளார்கள். அரசியல் தலைவர்கள் பதவியில் இருந்தால் தான் அவர்களுக்கு மதிப்பு. ரஜினி அப்படி கிடையாது. ரஜினிக்கு பதவி தேவையில்லை என்கிறார் சந்தோஷ்.
மதிப்பு
ரஜினி என்று சொன்னாலே மதிப்பு தான். அப்படிப்பட்ட ரஜினி எங்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்திருந்தால் பக்கபலமாக இருந்திருக்குமே என்ற எண்ணத்தில் தான் வருத்தத்தில் ஒரு உரிமையில் அப்படி கேட்டேன் என்று சந்தோஷ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











