ஒரு 13 வயசுப் பையனின் சின்ன ஆசை.. நிறைவேற்றுவாரா மணிரத்தினம்?

By Sudha

சென்னை: ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை இருக்கும்.. அதிலும் சினிமாப் பிரியர்களுக்கு நிறையவே இருக்கும்...

அப்படி ஒரு ஆசை இது.. அதுவும் 13 வயதுப் பையனின் ஆசை.. அக்னி நட்சத்திரம் படத்தை இப்போது யாரை வைத்து ரீமேக் செய்யலாம் என்று இந்த சின்னப் பையன் தனது ஆசையைச் சொல்லியுள்ளான்.

இந்தப் படத்தை மட்டும் இப்போது இவர்களை வைத்து ரீமேக்கினால் படம் செம ஹிட்டு என்று கியாரண்டியும் தருகிறான். அவன் சொல்லச் சொல்ல நமக்கே கியூரியாசிட்டி கூடத்தான் செய்தது. அவன் சொன்னது அப்படியே...

தல - தளபதி

தல - தளபதி

பிரபு கேரக்டருக்கு அஜீத் சூப்பர் பொருத்தமாக இருப்பாராம். அதேபோல கார்த்திக் கேரக்டருக்கு விஜய்தான் சரியான மேட்ச்சாம். ஏன் அஜீத் என்று கேட்டால் பிரபு மாதிரியே இவரும் கொஞ்சம் குண்டா இருக்காரு, அமைதியாப் பேசுறாரு. கார்த்திக் மாதிரியே விஜய் துறுதுறுன்னு இருக்காராம்.

விஜயக்குமாருக்கு அவரே ஓ.கே.

விஜயக்குமாருக்கு அவரே ஓ.கே.

விஜயக்குமார் கேரக்டருக்கு அவரையே போடலாம் என்பது இந்தப் பையன் கூறும் ஆலோசனை. ஒரு வேளை அவர் சரிப்பட்டு வராவிட்டால் சரத்குமாரைப் போடலாமாம். அதுவும் சரிவராவிட்டால் இருக்கவே இருக்கிறாராம் பிரகாஷ் ராஜ்.

அமலாவுக்குப் பதில் அமலா பால்!!

அமலாவுக்குப் பதில் அமலா பால்!!

அமலா கேரக்டருக்கு அமலா பால் சரியான சாய்ஸாக இருக்குமாம். ஏன் அப்படி என்று கேட்டால்.. பெயரிலேயே பொருத்தம் இருக்கிறதே.. பிறகெதுக்கு புதுசாக தேடிக் கொண்டு என்று பட்டென்று பதில் வருகிறது.

நிரோஷாவுக்கு ஹன்சிகா ஓகேவாம்

நிரோஷாவுக்கு ஹன்சிகா ஓகேவாம்

நிரோஷா நடித்த கேரக்டருக்கு ஹன்சிகாதான் செம பொருத்தமாக இருப்பாராம். ஏன் அனுஷ்கா நல்லாருக்காதா என்று கேட்டால், விஜய்க்கு பொருத்தமான ஜோடி ஹன்சிகாதான் என்று பதில் வந்தது. ஏன் திரிஷா சரியா வராதா என்று நாம் அப்பாவித்தனமாக கேட்டால், ஹன்சிகாதான் இப்போது லேட்டஸ்ட் டிரெண்ட் என்று படாரென்று பதில் வருகிறது.

இசை கண்டிப்பாக யுவன்தான்

இசை கண்டிப்பாக யுவன்தான்

படத்திற்கு இசை கண்டிப்பாக யுவன் ஷங்கர் ராஜாதான் போட வேண்டுமாம். அவர்தான் ராஜா ராஜாதி ராஜன் பாட்டை இந்தக் காலத்து இளசுகளுக்கேற்ற வகையில் சரியாக ரீமேக் செய்யவாராம்.

டைரக்டர் யாருப்பா...

டைரக்டர் யாருப்பா...

டைரக்டராக மணிரத்தினமே இருக்கலாமாம். ஒரு வேளை அவருக்கு சரிப்பட்டு வராவிட்டால், வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவாவை விட்டு இயக்க வைக்கலாமாம். அவர்தான் அண்ணன், தம்பி கதையை சரியாக இயக்குகிறாராம்.

அப்ப, அந்த இரண்டு மனைவிகளுக்கு ..

அப்ப, அந்த இரண்டு மனைவிகளுக்கு ..

ஒரு கேரக்டருக்கு சரண்யா மணிவண்ணன் ஓ.கேவாம். இன்னொரு கேரக்டருக்கு ராதிகா அல்லது ரோஜாவாம்.

அல்ட்டிமேட் ஜனகராஜுக்கு.. பரோட்டா சூரி

அல்ட்டிமேட் ஜனகராஜுக்கு.. பரோட்டா சூரி

அக்னி நட்சத்திரம் என்று வந்து விட்டால் ஜனகராஜை மறக்க முடியுமா என்ன.. அந்த கேரக்டருக்கு பரோட்டா சூரிதான் சூப்பராக செட் ஆகுமாம். காரணம், ஜனகராஜ் போல கலகலப்பான குரல், காமெடிக்கு இவர்தான் பொருத்தமாம்.

நீங்க என்ன சொல்றீங்க...??

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X