ஸ்டாலின் ஆரம்பித்து வைத்த சைகை.. மொத்தமாக ஃபினிஷ் பண்ண விஜய்யின் தரமான செய்கை!
சென்னை: காங்கிரஸ் கட்சி கூட தவெகவுக்கு கிடையாது என்பது உறுதியான நிலையில், தவெக இனிமேல் அவ்வளவு தான் ஃபினிஷ் என முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்த அந்த ஃபினிஷ் சைகையை கொளத்தூரில் வெற்றி பெற்ற உடனே வி.எஸ். பாபு இரண்டு கைகளையும் அதே போல செய்துக் காட்டி மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்ததை கொண்டாடினார்.
இந்நிலையில், சட்டசபையில் இன்று தனது உரையை முடிக்கும் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் வெளிநடப்பு செய்து வெளியேறிய நிலையில், சபாநாயகரிடம் அனுமதி பெற்று விஜய் அந்த சைகையை செய்கையாக செய்து ஃபினிஷ் செய்தார் என அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஃபயர் விட்டு வருகின்றனர்.

அப்பாவை காணோம் என விஜய் குட்டிக்கதை சொன்ன நிலையில், செங்கல்பட்டு கோர்ட்ல கணவனை காணோம்னு மனைவி தேடும் கதை என வீட்டுக்குச் சென்று உதயநிதி ட்வீட் போட்டுள்ளது மேலும், சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஸ்டாலின் தான் முதலில்: இப்படி கை அசைத்து ஃபினிஷ் என்பது போன்ற சைகையை முதலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தான் தேர்தலுக்கு முன்னதாக செய்துக் காட்டினார். ஊட்டிக்கு அவர் ஓய்வெடுக்க சென்ற போது கூட சில மக்கள் அதை செய்துக் காட்டும்படி கோரிக்கை விடுத்தனர். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பலத்த கூட்டணியுடன் இருக்கும் திமுக தான் வென்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என உறுதியாக இருந்தார். ஆனால், மக்கள் தீர்ப்பை மாற்றி எழுதிவிட்டனர்.

விஎஸ் பாபு 2 கைகளில் ஃபினிஷ் சைகை: முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலினை எதிர்த்து கொளத்துரில் தவெக சார்பாக போட்டியிட்ட வி.எஸ். பாபு கொளத்தூரில் திமுக தோற்றது என்றும் தவெக தான் வெற்றிப் பெற்றுள்ளது என்பதை கொண்டாடும் வகையில் 2 கைகளில் இப்படி ஃபினிஷ் ஆக்ஷனை காட்டியது அப்போதே திமுகவினரை அதிகளவில் ட்ரிக்கர் செய்தது.
முடித்து விட்ட முதலமைச்சர் விஜய்: இந்நிலையில், இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் தனது ஆட்சியில் ஊழல் இருக்காது என்றும் மக்களுக்குத் தேவையான நல்லாட்சியை கொடுக்க தொடர்ந்து தனது கட்சியினர் பாடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் கூடிய விரைவில் அனைத்து பிரச்னைகளும் முடிவுக்கு வரும் என்றும் உறுதியளித்தார். பார்ட்டி ஃபண்ட் குறித்து பேசியதும் எதிர்க்கட்சியினர் அமளி செய்து வெளிநடப்பு செய்தனர். இறுதியாக தனது உரையை முடிக்கும் போது ஃபினிஷ் செய்து விஜய் மு.க. ஸ்டாலினுக்கும் திமுகவினருக்கும் பதிலடி கொடுத்தது நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications