twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிக்கலில் சாய்ராம் கல்லூரி.. பிகில் பட விழாவிற்கு அனுமதி அளித்தது ஏன்? உயர்கல்வித்துறை நோட்டீஸ்!

    பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுத்தது ஏன்? என்று சென்னை சாய்ராம் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    |

    Recommended Video

    Vijay Speech at Bigil Audio Launch : விஜய் பேசிய அந்த ஒரு விஷயம்-வீடியோ

    சென்னை: பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுத்தது ஏன்? என்று சென்னை சாய்ராம் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று முதல் நாள் டிவியில் ஒளிபரப்பானது. பிகில் படத்திற்கு இந்த விழா பெரிய அளவில் விளம்பரத்தை தேடி தந்துள்ளது.

    அரசியல்

    அரசியல்

    நடிகர் விஜய் இதில் பேசிய விஷயங்கள், அரசியல் கருத்துக்கள் பெரிய வைரலாகி உள்ளது. இந்த விழாவில் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே நடிகர் விஜய் பேனர் பிரச்சனை தொடங்கி பல்வேறு சமூக பிரச்சனைகள் குறித்து விளக்கினார். அரசுக்கு எதிராக நிறைய கருத்துக்களை அவர் கூறினார்.

    என்ன பேசினார்

    என்ன பேசினார்

    இந்த விழாவில் நடிகர் விஜய் தனது பேச்சில், பேனர் விழுந்து, லாரி ஏறி சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் நிறைய விஷயங்கள் நடந்து விட்டது. இதில் யார் மீது கோவப்பட வேண்டுமோ அவர்கள் மீது யாருமே கோபம் கொள்ளவில்லை. தேவையில்லாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் புகார் கூறுகிறார்கள்.

    கோரிக்கை

    கோரிக்கை

    இவர்களுக்கு எதிராக நீங்கள் ஹேஷ்டேக் போடுவீர்கள் என்று நம்புகிறேன். சமூக வலைத்தளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். சமூக வலைத்தளங்கள் மூலம் நாம் போராட வேண்டும். சமுதாயத்தின் நலனுக்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன், என்று கூறினார்.

    என்ன விழா

    என்ன விழா

    சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் இந்த விழா நடந்தது. அங்கு இருக்கும் லியோ முத்து உள் அரங்கில் இந்த விழா நடந்தது. இதற்கு முன்பே அங்கு சில சினிமா பட விழாக்கள் நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    என்ன பேசினார்

    என்ன பேசினார்

    இந்த நிலையில் பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுத்தது ஏன்? என்று சென்னை சாய்ராம் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. யாரிடம் அனுமதி வாங்கி விழாவை நடத்துனீர்கள். கல்லூரிக்குள் தனியார் சினிமா விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது எப்படி என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    என்ன சிக்கல்

    என்ன சிக்கல்

    உயர் கல்வித்துறை சார்பாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இதில் கூறப்பட்டுள்ளது. இதனால் தற்போது சென்னை சாய்ராம் கல்லூரிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    English summary
    Who gave permission for the BIGIL Audio launch function? Higher education board asks Sai Ram college in Chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X