வனிதா அக்காவுக்கு யூடியூப் சேனல நடத்த இப்போ யார் ஹெல்ப் பண்றாங்க தெரியுமா? வெளியானது புதிய தகவல்!
சென்னை: பீட்டர் பாலை பிரிந்த பிறகு யூடியூப் சேனலை நடத்த வனிதாவுக்கு யார் உதவுகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை வனிதா விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் டைட்டில் வின்னரான வனிதா, சூட்டோடு சூடாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார்.

பீட்டர் பாலுடன் காதல்
தனது யூடியூப்பில் வித விதமாக சமைத்துக் காட்டி ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில்தான் தனது யூடியூப் சேனலின் விஷுவல் எடிட்டராக இருந்த பீட்டர் பாலுடன் காதல் கொண்டார் வனிதா. அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் மாதம் பீட்டரை லாக்டவுன் நேரத்தில கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார் வனிதா.

கடவுளுக்கே ரெண்டு பொண்டாட்டி
பீட்டர் பாலின் முதல் மனைவி தனது குழந்தைகளுக்கு அவர்களுடைய அப்பா வேண்டும் என்று மன்றாடியும் விட்டுத் தரவில்லை வனிதா. ரெண்டு பொண்டாட்டி எல்லாம் சகஜம் என அவர் ஒரு பக்கம் இருக்கட்டும் நான் ஒரு பக்கம் இருக்கிறேன் என கூறினார். கடவுள்களுக்கே ரெண்டு பொண்டாட்டிகள் உள்ளனர் என எடுத்துக்காட்டு கூறினார்.

6 மாதம் கூட நீடிக்கவில்லை
பீட்டர் பாலுக்காக பலரையும் எதிர்த்த வனிதா கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார். அவ்வளவு பாடுபட்டு பீட்டர் பாலுடன் வனிதா தொடங்கிய மூன்றாவது திருமண வாழ்க்கையும் தோல்வியை சந்தித்தது. மூன்றாவது கணவருடனான வனிதாவின் திருமண வாழ்க்கை 6 மாதங்கள் கூட நீடிக்கவில்லை.

தோற்று விட்டேன்
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பீட்டர் பாலை பிரிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாய் வீடியோ வெளியிட்டார். மேலும் பீட்டர் பால் மீண்டும் குடி மற்றும் சிகரெட்டுக்கு அடிமையாகிவிட்டார். பீட்டர் பாலை நம்பி நான் ஏமாந்து போய்விட்டேன் தோற்று விட்டேன் என கதறல் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

படுத்த யூடியூப் சேனல்
அந்த வீடியோ வைரலான நிலையில் அண்மையில் பீட்டர் பால் இல்லாமல் தன்னுடைய யூடியூப் சேனலை நடத்த முடியாமல் கஷ்டப்பட்ட வனிதா, பீட்டர் பாலை மீண்டும் அழைக்க சென்றதாக தகவல் வெளியானது. தனது நண்பரின் வீட்டில் இருந்த பீட்டர் பாலை அழைத்த வனிதாவை, என் முகத்திலேயே முழிக்காத என்றுக் கூறி பீட்டர் பால் விரட்டி விட்டதாக கூறப்பட்டது.

ஆந்திரா பச்சி புளுசு
மேலும் தன் பெயரையே கெடுத்துவிட்டதாக வனிதாவை பீட்டர் பால் அடிக்க பாய்ந்ததாகவும் தகவல் வெளியானது.
இதனால் யூடியூப் சேனலை நடத்த முடியாமல் வனிதா கஷ்டப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் ஆந்திரா பச்சி புளுசு என்ற ஒரு ரெசிப்பியை ஷேர் செய்தார்.

எடிட்டிங் யார் பண்றாங்க வனு?
அதனை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டார். இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர், கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் பாலா அழைத்ததை போலவே, வனு என அழைத்து இப்போது யார் உங்களுடைய யூடியூப் சேனலின் எடிட்டிங் மற்றும் கிராஃபிக்ஸ் வேலையை பார்க்கிறார்கள் என்று கேட்டிருந்தார்.

யூடியூப் பார்ட்னர்
அதற்கு வனிதா பதில் அளித்துள்ளார். அதாவது, வனு.. வளர்ப்பு மீன் கூப்பிட்ட பெயரா.. என்று கேட்டு விட்டு ட்ரென்ட் லவுட்.. என்னுடைய யூடியூப் பார்ட்னர் டெக்னிக்கல் டீம் என தெரிவித்துள்ளார். ஆக பீட்டர் பால் இல்லாவிட்டாலும் தன்னுடைய யூடியூப் சேனலை நடத்த முடியும் என மறைமுகமாக கூறியுள்ளார் வனிதா.
Recommended Video

கொக்கி போட்ட வனிதா
அண்மையில் அன்பாய் இருப்பதுதான் நம்மை மனிதனாக்குகிறது, தேவைப்படும் போது கோபம் இருக்க வேண்டும். அதுவும் நம்மை மனிதனாக்குகிறது. அன்பாய் இருப்பது ஒரு உயிரை காப்பாற்றும் என்றால் ஏன் அன்பாய் இருக்கக்கூடாது? நாம் போகும் போது எதையும் கொண்டு போகப் போவதில்லை. அன்பாய் இருக்கலாம் என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











