விஷாலுக்கு திருமணம் எப்போ... இன்று மாலை அறிவிப்பு?
சென்னை: அதிரடி ஆக்ஷன் ஹீரோவான விஷாலுக்கு 45 வயதான போதும், திருமணம் செய்து கொள்வார் முரட்டு சிங்கிளாகவே உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே இவரை பார்க்கும் பலர், எப்போது திருமணம் என கேட்டு வந்த நிலையில், கடந்த வாரம் அளித்த பேட்டியில் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறியிருந்தார். இன்று நடக்க இருக்கும் படவிழாவில் விஷாலின் திருமணம் குறித்த தேதியும், அவரின் வருங்கால மனைவி குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகரும், தயாரிப்பாளருமான விஷாலுக்கு கடந்த 2019 ஆண்டு ஆந்திராவை சேர்ந்த அனிஷா ரெட்டிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருந்த நிலையில் திடீரென திருமணம் நின்று போனது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இதையடுத்து, சினிமாவில் கவனம் செலுத்திய விஷால் தடுத்தடுத்து வெற்றிப்படத்தை கொடுத்து முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடித்து பின் நடிகர் சங்கத்தின் தலைவர் ஆனார். அதன் பின் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை கட்டி முடித்த பின்பே திருமணம் செய்து கொள்வேன் என்று அறிவித்தார். கிட்டத்தட்ட அவர் அறிவித்து 9 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது தான் நடிகர் சங்க கட்டிடத்தின் பணி முழுமையாக முடிய உள்ளது.
நடிகர் விஷால்: இதையடுத்து, அண்மையில் விஷால் அளித்த பேட்டியில், காதலித்து வருவதாகவும், நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா எப்படியும் ஆகஸ்ட் மாதம் 15ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். அதைத்தொடர்ந்து என்னுடைய வரும் என்னுடைய பிறந்த நாளில் திருமணம் குறித்த அறிவிப்பு இருக்கும் என்று கூறியிருந்தார். ஒரு மாதமாக காதலித்து வருவதாக சொன்னார். ஆனால், அந்த பெண் யார், சினிமாவை சேர்ந்தவரா என்பதை சொல்லாமல் இன்னும் சில மாதங்கள் காத்து இருங்கள் என்று கூறியிருந்தார். இருப்பினும் விஷாலின் ரசிகர்கள் அவரின் வருங்கால மனைவி யார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

இன்று அறிவிப்பு: இந்நிலையில், நடிகை சாய் தன்ஷிகா நாயகியாக நடித்துள்ள ‛யோகி டா' படத்தின் விழா இன்று மாலை சென்னையில் நடைபெற உள்ளது. இதில், நடிகர் விஷால் சிறப்பு கலந்து கொள்ள இருக்கிறார். இந்த விழாவில், அவர்களின் திருமண அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











