நடிகை குட்டி ராதிகான்னா யாரு? எனக்கு தெரியவே தெரியாதே.. சர்ச்சையான முன்னாள் முதல்வரின் பேச்சு!

By

பெங்களூரு: நடிகை குட்டி ராதிகாவை தனக்கு யார் என்று தெரியாது என முன்னாள் முதலமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பெங்களூருவை சேர்ந்தவர் யுவராஜ் சாமி. ஜோதிடரான இவர், பாஜக தலைவர்களின் பெயரில் பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாகப் புகார் கூறப்பட்டது..

இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாயின.

மீசை மாதவன்

மீசை மாதவன்

யுவராஜ் வங்கி கணக்கில் இருந்து நடிகை குட்டி ராதிகா, அவரது சகோதரர் ரவிராஜ் வங்கி கணக்கிற்கு ரூ.1.25 கோடி வரை மாற்றப்பட்டு இருந்தது தெரியவந்தது. நடிகை குட்டி ராதிகா, ஜனநாதன் இயக்கிய இயற்கை மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார். தொடர்ந்து வர்ணஜாலம், மீசை மாதவன் உட்பட சில படங்களில் நடித்தார்.

வரலாற்று படம்

வரலாற்று படம்

சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், ஜோதிடர் யுவராஜ் கொடுத்ததாகக் கூறப்பட்ட பணம் பற்றி நடிகை குட்டி ராதிகா விளக்கம் அளித்தார். அதில், யுவராஜ் சாமி, தனது குடும்ப ஜோதிடர் என்று கூறியிருந்தார். அவர் வரலாற்று படத்தைத் தயாரிக்க விரும்பினார் என்றும் அதில் நடிக்க முதல் கட்டமாக ரூ.15 லட்சம் அனுப்பியதாகக் கூறியிருந்தார்.

போலீசார் சம்மன்

போலீசார் சம்மன்

பிறகு தனது உறவினர் மூலம் ரூ.60 லட்சம் கொடுத்ததாகவும் அவரிடம் இருந்து ரூ1.25 கோடி பெற்றதாகச் சொல்வது தவறு என்றும் குட்டி ராதிகா செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக, குட்டி ராதிகாவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.

விளக்கம் அளித்தார்

விளக்கம் அளித்தார்

அதன்படி அவர் சில நாட்களுக்கு முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடந்தது. இந்நிலையில், தனது முன்னாள் மனைவியான குட்டி ராதிகாவை, கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி, யார் என்று கேட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

யார் என்று தெரியாது

யார் என்று தெரியாது

மண்டியா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த, முன்னாள் முதலமைச்சரும் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான ஹெச்.டி. குமாரசாமியிடம், நடிகை குட்டி ராதிகாவுக்கு ஜோதிடர் ரூ.1.25 கோடி வழங்கிய விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது குமாரசாமி, நடிகை ராதிகா யார் என்று தெரியாது, தெரியாதவர்களை பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும் என கூறினார்.

பிரிந்து விட்டார்

பிரிந்து விட்டார்

குட்டி ராதிகாவை, ஹெச்.டி குமாரசாமி சில வருடங்களுக்கு முன் இரண்டாவதாகத் திருமணம் செய்திருந்தார். இவருக்கு ஷமிகா என்ற மகள் இருக்கிறார். பின்னர் அவரை விட்டு குமாரசாமி பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் தனக்கு குட்டி ராதிகாவை தெரியாது என கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X