அப்பா வில்லன், மகன் ஹீரோ... மகானில் யார் வெல்வார்!

சென்னை: விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மகான்.

Recommended Video

Dhurv -வை பங்கமாய் கலாய்த்த Chiyaan Vikram | Bobby Simha, Team Interview

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகியுள்ளது

முதல் முறையாக விக்ரம் மற்றும் துருவ் இணைந்து நடித்து இருப்பதாலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உள்ள நிலையில் இதில் துருவ் ஹீரோவாகவும் விக்ரம் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

விக்ரமுடன் உடன் இணைந்து

விக்ரமுடன் உடன் இணைந்து

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தை இயக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து இப்போது மகான் என்ற படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் முதல் முறையாக இணைந்து நடித்து வருகின்றனர். தெலுங்கில் மெகா ஹிட் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது இதில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் துருவ். நடிகர் விக்ரமின் மகனாகவே இருந்தாலும் தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் துருவ் விக்ரம் இரண்டாவது படத்திலேயே அப்பா விக்ரமுடன் உடன் இணைந்து நடித்துள்ளார்.

தந்தை-மகன் பாசத்தை

தந்தை-மகன் பாசத்தை

கோலிவுட்டில் கேங்ஸ்டர் படங்களுக்கு பெயர் போன இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மகான் கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகியுள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. அதன்படி வரும் பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் மகான் நேரடியாக வெளியாகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படங்களிலேயே மிகவும் வித்தியாசமாக தந்தை-மகன் பாசத்தை கூறும் படமாக இப்படம் உருவாகியுள்ளது

விக்ரம் வில்லன் கதாபாத்திரத்தில்

விக்ரம் வில்லன் கதாபாத்திரத்தில்

நடிகர் விக்ரமுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகான் வெளியாவதால் விக்ரமின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். வாத்தியாராக இருக்கும் விக்ரம் ஒரு கட்டத்தில் கேங்ஸ்டர் டானாக மாறுகிறார். எனவே இந்த படத்தில் விக்ரம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். விக்ரமுக்கு மகனாக நடித்துள்ள துருவ் இந்த படத்தில் அப்பாவை எதிர்த்து சண்டை போடும் ஹீரோவாக நடித்துள்ளார்.

மகானில் யார் வெல்வார்

மகானில் யார் வெல்வார்

நிஜ வாழ்க்கையில் மட்டுமல்லாமல் மகன் படத்திலும் தந்தை மகனாக நடித்துள்ளதால் இந்த சூப்பர் ஹிட் காம்போ வை ரசிகர்கள் காண பெரும் ஆவலில் உள்ளனர். வில்லன் விக்ரமுக்கும் ஹீரோ துருவ்வுக்கும் இடையே நடக்கும் மோதலில் இறுதியில் யார் வெல்வார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் உள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். பிப்ரவரி 10ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X