கோலிவுட் ஹீரோக்களுக்கு 'அம்மா' என்றால் யார் தெரியுமா?
சென்னை: சரண்யா பொன்வண்ணனை கோலிவுட் ஹீரோக்கள் அம்மா என்று அன்புடன் அழைக்கிறார்களாம்.
கோலிவுட்டில் அம்மா வேடங்கள் என்றாலே இயக்குனர்களின் நினைவுக்கு முதலில் வருபவர் சரண்யா பொன்வண்ணன் தான். அந்த அளவுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பில் பின்னி பெடல் எடுக்கிறார்.
பரத், ஜீவா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அம்மாவாக நடித்துள்ள சரண்யா கூறுகையில்,

மேடம்
என்னுடைய அனைத்து படங்களின் படப்பிடிப்புகளின்போது என்னை யாரும் மேடம் என்று இதுவரை அழைத்ததே இல்லை.

அம்மா
ஹீரோக்கள் முதல் அனைவரும் என்னை ஷூட்டிங் ஸ்பாட்டில் அன்பாக அம்மா என்று தான் அழைத்து வருகிறார்கள்.

கதாபாத்திரம்
என்னுடைய கதாபாத்திரம் மற்றும் படப்பிடிப்பில் நான் நடந்து கொள்ளும் விதம் தான் அவர்கள் என்னை அம்மா என்று அழைக்க காரணம்.

மகன்கள்
நான் பல ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்துவிட்டேன். அதனால் சினிமா துறையில் எனக்கு பல மகன்கள் உள்ளனர் என்று கூறிக்கொள்ள முடியும்.

ஜீவா
உதயநிதி ஸ்டாலின், ஜீவா, சசிகுமாருடன் நடித்துள்ளேன். அவர்கள் என்னை தங்களின் அம்மா போன்றே பார்ப்பார்கள், மதிப்பார்கள் என்றார் சரண்யா.


Click it and Unblock the Notifications











