விஷால் திருமணம் செய்யப் போகும் அனிஷா ரெட்டி யார் தெரியுமா? #AnishaAllaReddy
Recommended Video

சென்னை: விஷால் திருமணம் செய்து கொள்ளும் அனிஷா ரெட்டி பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன.
நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி என்கிற பெண்ணை திருமணம் செய்யப் போவதாக அவரின் தந்தை ஜி.கே. ரெட்டி தெரிவித்தார்.
இது காதல் திருமணம் என்று விஷால் கூறினார். மேலும் தனது திருமண விபரங்களை தானே வெளியிடுவதாக கூறியுள்ளார்.
அனிஷா
தான் விஷாலுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தனது திருமணம் குறித்த தகவலை பொங்கல் திருநாள் அன்று அறிவித்துள்ளார் அனிஷா.
நடிப்பு
ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி அமெரிக்காவில் படித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய பிறகு அவர் விஜய் தேவரகொண்டாவின் பெல்லி சூப்புலு மற்றும் அர்ஜுன் ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர் நன்றாக பாடுவார், நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும், புத்தகம் எழுதுவதில் ஆர்வம் கொண்டுள்ளார், டிரெக்கிங் செல்பவர்.

நடிகர் சங்க கட்டிடம்
விஷால், அனிஷா திருமணம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடக்கும் என்று கூறப்படுகிறது. விஷால் ஏற்கனவே தெரிவித்தபடி நடிகர் சங்க கட்டிடததில் தான் அவரின் திருமணம் நடக்க உள்ளது.
வாழ்த்து
விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகை ஆர்த்தி அவரை முதல்வர் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











