twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குட்டி ஸ்டோரி லிரிக்கல் வீடியோவை உருவாக்குனது இவர்தான்.. வச்சு செய்யுங்க.. போட்டுக்கொடுத்த இயக்குநர்

    |

    சென்னை: மாஸ்டர் படத்தின் ஒரு குட்டி ஸ்டோரி லிரிக்கல் வீடியோவை உருவாக்கியவர் குறித்த தகவலை ஆடை படத்தின் இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.

    மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜயை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார். அவர் மட்டுமின்றி ஆண்ட்ரியா, ஷாந்தனு என பலரும் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளனர்.

    குட்டி ஸ்டோரியை கண்டுக்காத அட்லீ.. ட்விட்டரில் வளைத்த விஜய் ரசிகர்கள்.. குவியும் ட்ரோல்கள்!குட்டி ஸ்டோரியை கண்டுக்காத அட்லீ.. ட்விட்டரில் வளைத்த விஜய் ரசிகர்கள்.. குவியும் ட்ரோல்கள்!

    சிங்கிள் ட்ராக்

    சிங்கிள் ட்ராக்

    மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் ரொம்பவே இளமையாக உள்ளார். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் லிரிக்கல் வீடியோ நேற்று வெளியானது.

    பாடலாசிரியரான இயக்குநர்

    பாடலாசிரியரான இயக்குநர்

    முழுக்க முழுக்க ஆங்கில வார்த்தைகளை கோர்த்து உருவாக்கப்பட்டுள்ளது இந்தப் பாடல். லெட் மி சிங் எ ஒரு குட்டி ஸ்டோரி என ஆரம்பிக்கும் இந்தப் பாடலை கனா படத்தின் இயக்குநரும், நெருப்புடா நெருங்குடா பாடலை எழுதியவருமான அருண் ராஜா காமராஜ் எழுதியிருக்கிறார்.

    குவியும் லைக்ஸ்

    குவியும் லைக்ஸ்

    நேற்று மாலை வெளியான இந்தப் பாடல் சமூக வலைதளங்களை திணறடித்து வருகிறது. வியூஸ்களையும் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது. முழுக்க முழுக்க கார்ட்டூன்களால் உருவாக்கப்பட்டுள்ளது இந்தப் பாடல். இதில் பணவீக்கம், வன்முறை, வேலையின்மை என பாஜக அரசை நேரடியாகவே சாடியிருக்கின்றனர்.

    கார்ட்டூன்கள்

    கார்ட்டூன்கள்

    போதாகுறைக்கு ஹேட்டர்ஸ் என வரும் இடங்களில் கார்ட்டூன்களின் தலையில் காவி நிறம் பூசப்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் நடிகர் விஜய் பாஜகவை நேரடியாகவே அட்டாக் செய்திருக்கிறார் என விமர்சித்து வருகின்றனர். 3000க்கும் மேற்பட்ட கார்ட்டூன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    வீடியோவை உருவாக்கியவர்

    தமிழ் சினிமாவில் இதுபோன்ற லிரிக்கல் வீடியோ வெளியிடுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு குட்டி ஸ்டோரி லிரிக்கல் வீடியோவை உருவாக்கியது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை உருவாக்கிய நபர் குறித்த தகவலை ஆடை படத்தின் இயக்குநர் ரத்னகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இவர்தான் அவர்

    இவர்தான் அவர்

    இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், குட்டி ஸ்டோரி லிரிக்கல் வீடியோவுக்கு பின்னால் இருக்கும் நபர் இவர்தான். இவரது பெயர் லோகி என அவரது டிவிட்டர் ஹேன்டிலை மென்ஷன் செய்திருக்கிறார். மேலும் அவர், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் அசோசியேட் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

    நீங்க கேட்கலாம்

    நீங்க கேட்கலாம்

    மாஸ்டர் சிங்கிள் பயங்கரமான வேலை செய்திருக்கிறார் என்றும் இனிமேல் ஏதாவது அப்டேட் வேண்டும் என்றால் நீங்கள் அவரிடமும் கேட்கலாம் என்றும் பதிவிட்டுள்ளார். அதோடு RIP லோகி என்று பதிவிட்டு ஸ்மைலி ஈமோஜிகளை பதிவிட்டுள்ளார் இயக்குநர் ரத்ன குமார்.

    English summary
    Who is behind of Master single lyrical video? Director Ratnakumar reveals the person who made the video of Oru Kutty story lyrical video.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X