Just In
- 4 hrs ago
சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா!
- 5 hrs ago
விஜய் டிவி புகழ் திவாகருக்கு… டும் டும் டும்.. அபியை மணந்தார்!
- 6 hrs ago
புதிய முயற்சியை ஆதரித்ததால்தான்… நான் இயக்குனரானேன்.. கார்த்திக் சுப்புராஜ்
- 6 hrs ago
கையில் சரக்குடன் ஃபிரன்டை கட்டிப்பிடித்த நடிகை மாளவிகா.. தீயாய் பரவும் போட்டோ!
Don't Miss!
- News
புதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
- Finance
அமூல் பால் விலை ஏற்றம்..!
- Sports
பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்!
- Technology
பிளிப்கார்ட்: பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் சியோமி பேண்ட் 3-ஐ.!
- Automobiles
ஆரஞ்ச் நிறத்தில் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்... அடுத்த ஆண்டு அறிமுகம்
- Lifestyle
நீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா?
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விஜய் தேவரகொண்டா vs த்ருவ் விக்ரம் யாரு பெஸ்ட்? ட்விட்டரில் வெடித்த சண்டை!
சென்னை: ஆதித்ய வர்மா படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படத்திற்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.
மேலும், நடிகர் த்ருவ் விக்ரமின் தனித்துவமான நடிப்பு படத்தில் ஆபாரம் என்றும், தமிழ் சினிமாவின் புதிய கனவு கண்ணனாக த்ருவ் விக்ரம் மாறுவார் என்றும் ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த விஜய் தேவரகொண்டாவா அல்லது த்ருவ் விக்ரமா யாருடைய நடிப்பு சிறந்தது என்ற புதிய சர்ச்சை சமூக வலைதளத்தில் ரசிகர்களிடையே சண்டையை உருவாக்கி வருகிறது.
அட நம்ம 'அட்டக்கத்தி' நந்திதாவா இது.. சேலை கவர்ச்சியில் ரம்யா பாண்டியனையே தூக்கி சாப்டுட்டாரே!
|
தூள் கிளப்பிய த்ருவ்
கிரிசாயா இயக்கத்தில் அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக ஆதித்ய வர்மா இன்று வெளியாகியுள்ளது. நடிகர் சியான் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் இந்த படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். அறிமுகமான முதல் படத்திலேயே த்ருவ் விக்ரம் சிக்ஸர் அடித்துள்ளதாகவும், தனது கதாபாத்திரத்திற்கான கச்சிதமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
|
பாசிட்டிவ் விமர்சனங்கள்
தீபாவளிக்கு வெளியான கைதி படத்திற்கு பிறகு, அதிக பாசிட்டிவ் விமர்சனங்கள் த்ருவ் விக்ரமின் ஆதித்ய வர்மாவுக்கு கிடைத்துள்ளது. படத்தை பார்த்த பலரும் நேர்மையான ரீமேக் என பாராட்டி வருகின்றனர்.
|
ஓவர் ஆக்டிங்
த்ருவ் விக்ரமின் அபாரமான நடிப்பை பலரும் பாராட்டி வரும் நிலையில், கடுப்பான விஜய் தேவரகொண்டா ரசிகர்கள், த்ருவ் விக்ரம் ஓவர் ஆக்டிங் செய்துள்ளார் என்றும், அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா இயல்பாக வாழ்ந்திருப்பார் என்றும், அர்ஜுன் ரெட்டி என்ற ஹேஷ்டேகை உருவாக்கி ட்விட்டரில் சண்டையிட துவங்கியுள்ளனர்.
|
யாரு பெஸ்ட்?
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா சிறப்பாக நடித்திருந்ததால் தான் அந்த படம் கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 100 கோடி வசூலை தாண்டியது. பாலிவுட்டில் ஷாகித் கபூரும் அந்த கபீர் சிங்காக கச்சிதமாக நடித்திருந்தார். அதே போல, தமிழில் வெளியாகியுள்ள ஆதித்ய வர்மா படத்தில் த்ருவ் விக்ரம் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டா தான் என்றும், ஆதித்ய வர்மா த்ருவ் விக்ரம் தான் என்றும் சில ரசிகர்கள் சமரசம் செய்து வருகின்றனர்.
|
இதுதான் பெஸ்ட்
அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் படங்களை விட த்ருவ் விக்ரம் நடித்துள்ள ஆதித்ய வர்மா படம் தான் பெஸ்ட் என இந்த நெட்டிசன் தனது கருத்தை கூறியுள்ளார்.