யார் தான் உங்க பொண்டாட்டி?: பல்லாள தேவனே பதில் சொல்லிட்டார்
ஹைதராபாத்: பல்லாள தேவனின் மனைவி யார் என்ற கேள்விக்கு ராணாவே பதில் அளித்துள்ளார்.
2015ம் ஆண்டு வெளியான பாகுபலி படத்தை பார்த்தவர்கள் அனைவரும் கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார் என்று கேட்டனர். சமூக வலைதளங்களிலும் இது பற்றி தான் பேசினர்.
இந்நிலையில் கடந்த 28ம் தேதி வெளியான பாகுபலி 2 படத்தில் அந்த கேள்விக்கு பதில் கிடைத்தது.

ஜீனியஸ்
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை சுஷாந்த் தாஹால் என்பவர் 2015ம் ஆண்டிலேயே கணித்துள்ளார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவரின் கணிப்பு மிகச்சரி என்பது தான்.

பல்லாள தேவன்
பாகுபலி படத்தில் பல்லாள தேவனின் மகனாக பத்ரா என்ற கதாபாத்திரத்தை காட்டியிருப்பார் இயக்குனர் ராஜமவுலி. ஆனால் பல்லாள தேவனின் மனைவியை காட்டவில்லை.

ராணா
பாகுபலி 2 படத்திலும் பல்லாள தேவனின் மனைவியை காட்டவில்லை. இதனால் படத்தை பார்ப்பவர்கள் தற்போது கேட்கும் கேள்வி, பல்லாள தேவனின் மனைவி யார் என்று தான்.

மனைவி
யார் தான் ராணா உங்க பொண்டாட்டி என்று அவரிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில், பத்ரா வாடகைத் தாய் மூலம் பிறந்தவன் என்று சொல்லிக் கொள்ளுங்கள். அவனுக்கு தாய் இல்லை என்றார்.


Click it and Unblock the Notifications











