twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பான் இந்தியா படமாக உருவாகும் தனுஷின் கேப்டன் மில்லர் என்ன கதை? படப்பிடிப்பு எப்போ ஆரம்பம் தெரியுமா?

    |

    சென்னை: ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக தனுஷ் நடிக்க உள்ள கேப்டன் மில்லர் படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் பெரியளவில் பாலிவுட் பிரபலங்கள் வெளியிட வெளியானது.

    தனுஷின் மாறன் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தான் கேப்டன் மில்லர் படத்தையும் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

    திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி என அடுத்தடுத்து மூன்று படங்களை வெளியிட காத்திருக்கும் தனுஷின் கேப்டன் மில்லர் எப்படிப் பட்ட கதை என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

    பச்சக்கிளிக்காக விட்டுக் கொடுத்த அபி டெய்லர்.. கலர்ஸ் தமிழில் மாற்றப்பட்ட நேரம்! பச்சக்கிளிக்காக விட்டுக் கொடுத்த அபி டெய்லர்.. கலர்ஸ் தமிழில் மாற்றப்பட்ட நேரம்!

    மாறன் படத்தை தொடர்ந்து

    மாறன் படத்தை தொடர்ந்து

    இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரகனி மற்றும் அமிர் நடிப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான படம் மாறன். வீக்கான மேக்கிங்கால் படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. மாறன் சிறப்பாக வரவில்லை என்பதை அறிந்த பின்னர் தான் அதனை ஓடிடிக்கே தள்ளி விட்டனர் என்றும் கூறுகின்றனர். இந்நிலையில், சத்யஜோதி பிலிம்ஸ் மீண்டும் தனுஷை வைத்து கேப்டன் மில்லர் படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது.

    சாணிக் காயிதம் இயக்குநர்

    சாணிக் காயிதம் இயக்குநர்

    ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தான் அடுத்ததாக இப்படியொரு பான் இந்தியா படத்தை நடிகர் தனுஷை வைத்து இயக்க உள்ளார். சமீபத்தில் அட்டகாசமான மோஷன் போஸ்டருடன் போராளியாக தனுஷை முகமூடி அணிந்து மோட்டார் பைக்கில் செல்வது போன்ற ஆர்ட் வொர்க் ஸ்டில்களை வெளியிட்டு இருந்தார். மேலும், அடுத்த ஆண்டு சம்மருக்கு படம் வரும் என்றும் அறிவித்துள்ளனர்.

    தனுஷ் ஏன்

    தனுஷ் ஏன்

    தனுஷின் கேப்டன் மில்லர் படம் பீரியட் ஃபிலிம் என்பது அதன் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை பார்த்தாலே புரிகிறது. இதுவரை தான் இயக்கிய படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட படமாக இந்த படம் இருக்கும் என பேட்டிகளில் அருண் மாதேஸ்வரன் கூறியிருந்தார். மேலும், கதை எழுத தொடங்கும் போது ஹீரோ யாருன்னு திட்டமிடவில்லை. ஆனால், பாதி கதைக்கு மேல், இந்த கதையில் 3 வித தோற்றத்தில் வெவ்வேறு காலக்கட்டத்தில் ஹீரோ வருவது போல இருந்ததால், அதற்கு தனுஷ் தான் சரியான தேர்வு என முடிவு செய்ததும் கதையை அவரிடம் சொன்னேன் அவருக்கும் பிடித்து விட்டது. அடுத்த மாதம் ஷூட்டிங் செல்கிறோம் எனக் கூறியுள்ளார்.

    யாரு இந்த கேப்டன் மில்லர்

    யாரு இந்த கேப்டன் மில்லர்

    விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த வல்லிபுரம் வசந்தன் என்பவரைத் தான் கேப்டன் மில்லர் என போராளிகள் அழைத்து வருகின்றனர். 1987ம் ஆண்டு நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் மரணமடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவரின் கதாபாத்திரத்தில் தான் தனுஷ் நடிக்கப் போகிறாரா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    Recommended Video

    Pudhupettai 2 எப்போ வரும்? KGF,RRR-ஐ மிஞ்சும் Vikram *Kollywood | Filmibeat Tamil
    போர் காட்சிகள்

    போர் காட்சிகள்

    மேலும், கேப்டன் மில்லர் படத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற போர் காட்சிகளும் பிரம்மாண்டமான முறையில் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. கேப்டன் மில்லர் படத்தை முடித்து விட்டுத் தான் அண்ணன் செல்வராகவன் உடன் புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் தனுஷ் நடிக்கச் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Who is Captain Miller and When will Dhanush's Captain Miller shoot starts
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X