16 வயசா இருக்கும்போது அம்மாவ கொன்னுட்டாங்க.. வீட்டிலேயே முடங்கிய பிக்பாஸ் அமீர்.. வெளியான தகவல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அமீர் குறித்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதலில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி 75 நாட்களை கடந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்து வைல்டு கார்ட் என்ட்ரியாக டான்ஸ் மாஸ்டர் அமீர் மற்றும் சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் ஆகியோர் பங்கேற்றனர்.

பாவனி பின்னால் சுற்றி
இதில் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த புதிதில் ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் பக்கவாக அனலைஸ் செய்து ரிவ்வியூ கொடுத்தார் அமீர். இதனால் சரியான தெளிவு இருக்கிறது என ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். ஆனால் அடுத்த சில நாட்களில் எப்போதும் பாவனி பின்னால் சுற்றுவதையே வேலையாக கொண்டார்.

பகீர் தகவல்கள்
எப்போதும் பாவனியிடம் கடலை போடுவது, வழிவது என இருப்பதால் அமீரை விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள். நேற்றைய நிகழ்ச்சியில் நேருக்கு நேராக பாவனியை காதலிப்பதாக கூறினார் அமீர். இந்நிலையில் அமீரின் கடந்த காலம் குறித்த சில பகீர் தகவல்களை அவரது நண்பர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

16 வயதில் தாயை பறிகொடுத்து...
அதவாது டான்ஸ் மாஸ்டர் அமீர் தனது ஒரு வயதில் தந்தையை இழந்துள்ளார். பின்னர் அம்மாவின் அரவணைப்பிலேயே வளர்ந்துள்ளார் அமீர். அவருக்கு 16 வயதாக இருக்கும் போது அவருடைய அம்மா கொலை செய்யப்பட்டுள்ளார். தன்னுடைய 16 வயதில் அமீர் கல்லறைக்கும் காவல் நிலையத்திற்குமே ஓடிக் கொண்டிருந்தாராம்.

வீட்டுக்குள்ளேயே முடங்கி...
அம்மா கொலை செய்யப்பட்ட பின்னர் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமலும் அச்சத்தாலும் வீட்டில் இருந்து வெளியே வரமால் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தாராம் அமீர். எந்த ஆதரவும் இல்லாமல் இருந்த அமீர் ஒரு குடிசையில் பாத்ரூம் வசதி கூட இல்லாமல்தான் வளர்ந்தார் என்றும் பதிவிட்டுள்ளார்.

ராணுவமே விருப்பம்
எப்படியாவது ராணுவத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான் அமீரின் சிறுவயது கனவு என்றும், அது தொடர்பாக அமீர் படித்ததாகவும் கூறியுள்ளார் அந்த நண்பர். மேலும் அமீர் தன்னுடைய கையில் தேசியக் கொடியை பச்சை குத்திக்கொண்டதாகவும் கூறியுள்ளார். அமீர் குறித்த இந்த தகவலை கேட்ட ரசிகர்கள், அவர் மீதான அனுதாபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஊட்டியில் டான்ஸ் அகாடமி
மேலும் சிலர் அப்படி ஒரு சூழ்நிலையில் வளர்ந்த அமீர், மனதை அலைபாய விடாமல் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். டான்ஸ் மாஸ்டரான அமீர் ஊட்டியில் டான்ஸ் அகாடமி ஒன்றை நடத்தி வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி...
ஆறடி ஆண்டவா, ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு கோரியோகிராஃப்பும் செய்துள்ளார் அமீர். மேலும் விஜய் டிவியின் பல்வேறு நடன நிகழ்ச்சிகளுக்கு அமீர் கோரியோகிராஃப் செய்துள்ளார். இதன்மூலமாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் அமீர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











