ஜெயிலரில் டார்க் காமெடியில் கலக்கிய ஒரே நபர்.. யார் இந்த தன்ராஜ்.. நெல்சன் எங்கே இருந்து பிடித்தார்?

சென்னை: ஜெயிலர் திரைப்படம் டார்க் காமெடி படம் என்று சொல்லப்பட்டாலும் சூப்பர்ஸ்டாரின் அதகள ஆக்‌ஷன் காட்சிகளும் சிவராஜ்குமார், மோகன்லாலின் மாஸ் கேமியோக்களும் தான் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

டாக்டர், மாவீரன் படங்களில் வொர்க்கவுட் ஆன அளவுக்கு யோகி பாபுவின் காமெடி இந்த படத்தில் பெரிதாக வொர்க்கவுட் ஆகவில்லை.

Who is Dhanraj, All details about Jailer actor Dhanraj is revealed by Director Nelson

ஆனால், படத்தில் டார்க் காமெடியில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை கலக்கிய ஒரே நபரான தன்ராஜ் குறித்தும் அவரை எங்கே இருந்து பிடித்து வந்தேன் என்றும் இயக்குநர் நெல்சன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளார்.

ரெடின் கிங்ஸ்லி முதல் கிளி வரை: தமிழ் சினிமாவில் திடீரென வித்தியாசமான நடிகர்களை அறிமுகப்படுத்தி டார்க் காமெடியில் சிரிக்க வைத்து வருகிறார் இயக்குநர் நெல்சன். கோலமாவு கோகிலா படத்தில் ரெடின் கிங்ஸ்லியை அறிமுகப்படுத்தி ரசிகர்களை சிரிக்க வைத்த நெல்சன் டாக்டர் படத்தில் ரெடின் கிங்ஸ்லியின் காமெடியை மேலும் மெருகேற்றியிருந்தார்.

Who is Dhanraj, All details about Jailer actor Dhanraj is revealed by Director Nelson

ரெடின் கிங்ஸ்லியை தொடர்ந்து மாகாளி சுனில் அவருக்கு அசிஸ்டன்ட்டாக வரும் கிளி கதாபாத்திரம் என தனி ஜோனில் இருப்பவர்களை அப்படியே அவர்கள் இருப்பதை போலவே வித்தியாசமாக சினிமாவில் காட்டி ரசிகர்களை சிரிக்க வைக்கலாம் என்றும் அதுபோன்ற தனித்துவமான கேரக்டர்களுடன் எப்போதும் பழகுவது தனக்கு ரொம்பவே பிடிக்கும் என நெல்சன் கூறியுள்ளார்.

ஜெயிலரில் கலக்கிய தன்ராஜ்: வில்லன் வர்மனாக அடித்துள்ள விநாயகத்தின் நண்பராக வரும் தன்ராஜ் முதல் காட்சியிலேயே உனக்காக விழுந்து சாகிறேன் என செய்யும் அலப்பறை மற்றும் எதிர்நீச்சல் மாரி முத்து மற்றும் தன்ராஜை ரஜினியுடன் அனுப்பி வேவு பார்க்க வைக்க விநாயகம் அனுப்பி வைக்க, சிபிஐ அதிகாரிகள் உண்மையானவர்களா என சோதிப்பது, காரில் செல்லும் போது காலை தூக்கி மேலே போட்டுக் கொண்டு ரகளை செய்வது என ஜெயிலர் படத்தில் உண்மையாகவே டார்க் காமெடியில் ரசிகர்களை சிரிக்க வைத்த ஒரே நபர் என்றால் அது தன்ராஜ் தான்.

Who is Dhanraj, All details about Jailer actor Dhanraj is revealed by Director Nelson

பார்க்க முதலில் கோலமாவு கோகிலா அன்பா என ரசிகர்கள் நினைத்த நிலையில், இது வேற ஒரு ஸ்பெஷல் ஐட்டத்தை நெல்சன் இறக்கி இருக்கிறார் என கொஞ்ச சீன்களிலேயே தன்ராஜ் புரிய வைத்து விடுகிறார்.

Who is Dhanraj, All details about Jailer actor Dhanraj is revealed by Director Nelson

யார் இந்த தன்ராஜ்: இப்படியொரு கேரக்டரை எங்கே இருந்து புடிச்சீங்க நெல்சன் என்ற கேள்விக்கு அவர் என்னுடைய பழைய ஜிம் மாஸ்டர். 12 வருஷத்துக்கு முன்னாடியே பழக்கம். ஆரம்ப காலத்தில் இருந்தே அவரது வித்தியாசமான செயல்கள், நடவடிக்கைகள் எனக்கு ரொம்பவே புடிக்கும். சரியான நேரத்தில் பயன்படுத்த நினைத்து இருந்தேன், ஜெயிலர் படத்தில் அந்த கதாபாத்திரத்துக்கு இவர் செட் ஆவார் என நினைத்து வைத்தேன், ரசிகர்கள் அவரது பர்ஃபார்மன்ஸை ரசித்து சிரிப்பது சந்தோஷம் எனக் கூறியுள்ளார். டாக்டர் படத்திலும் அந்த அடிவாங்கும் காட்சியில் கையை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்லும் நபர் இவர் தான் என்றும் ரிவீல் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X