அது யாரு டோணி?: சர்ச்சையை கிளப்பிய ராய் லட்சுமி

By Siva

Recommended Video

யாரும்மா இந்த எஸ்.மது?| தோனி யாரு-ராய் லட்சுமி-வீடியோ

மும்பை: அது யாரு டோணி என்று கேட்டு பலரையும் அதிர வைத்துள்ளார் நடிகை ராய் லட்சுமி.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து வரும் ராய் லட்சுமி ஜூலி 2 படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் அவர் கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டி நடித்துள்ளார்.

ராய் லட்சுமி ஒரு காலத்தில் கிரிக்கெட் வீரர் டோணியை காதலித்தார்.

 சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

2008ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடராக இருந்த ராய் லட்சுமிக்கும் அணியின் கேப்டன் டோணிக்கும் இடையே ஈர்ப்பு ஏற்பட்டு டேட்டிங் செய்தனர். ஆனால் அது நீடிக்கவில்லை.

 டோணி

டோணி

டோணியும், ராய் லட்சுமியும் பிரிந்துவிட்டாலும் அது பற்றி பலமுறை பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் ராய் லட்சுமியிடம் அண்மையில் டோணி பற்றி கேட்கப்பட்டது.

 யாரு?

யாரு?

டோணியா யாரு அவரு என்று பதில் கேள்வி கேட்டார் ராய் லட்சுமி. இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அது ஒரு காலத்தில் நடந்தது. தற்போது அவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது என்றார் ராய் லட்சுமி.

 மரியாதை

மரியாதை

நான் டோணியை திருமணம் செய்யப் போகிறேன் என்று மக்கள் நினைத்தார்கள். அது உண்மை இல்லை. டோணி விஷயம் பற்றி விரிவாக பேச விரும்பவில்லை. ஏன் என்றால் நான் அவர் மீது மரியாதை வைத்துள்ளேன் என்று ராய் லட்சுமி தெரிவித்தார்.

நடக்காது

நடக்காது

சில விஷயங்கள் ஒர்க்அவுட் ஆகாது. அப்போது அதையே நினைத்துக் கொண்டிருக்காமல் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். இனி இது பற்றி பேச விரும்பவில்லை என்று ராய் லட்சுமி கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X