அட கடவுளே.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் போட்டியாளர் இவர்தான்.. நல்லா பண்றாங்க!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எவிக்ட்டான நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து வருகிறார்.

இதில் சனிக்கிழமைகளில் வாரம்தோறும் நடக்கும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும். இதில் பாராட்டு, வசவு என யார் யாருக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதையெல்லம் கொடுப்பார் கமல்.

யார் வெளியேறுகிறார்கள்?

யார் வெளியேறுகிறார்கள்?

அதனை தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் இருந்து காப்பாற்றப்படும் போட்டியாளர் மற்றும் வெளியேற்றப்படும் போட்டியாளர் குறித்து அறிவிப்பார் கமல். ஆனால் ஞாயிற்றுக்கிழமைக்கான எபிசோடு சனிக்கிழமையை காட்சியக்கப்படும் என்பதால் யார் வெளியேறுகிறார்கள் என்ற தகவல் சனிக்கிழமையை சமூக வலைதளங்களில் கசிந்து விடுகிறது.

முன்கூட்டியே வெளியானது

முன்கூட்டியே வெளியானது

இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து 5 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் 5 பேர் குறித்த தகவலும் முன்கூட்டியே வெளியானது. ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுச்சி, சம்யுக்தா என 5 பேரின் எவிக்ஷனும் முன்கூட்டியே வெளியானது.

டாப்பில் ஷிவானி

டாப்பில் ஷிவானி

இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் புராசஸில் கடந்த வாரத்தை போன்றே 7 பேர் நாமினேட் ஆயினர். அதன்படி அதிக ஓட்டுக்களை பெற்று ஷிவானி நாமினேஷன் லிஸ்ட்டில் டாப்பில் இடம் பிடித்தார்.

கடலை போடுவது மட்டுமே

கடலை போடுவது மட்டுமே

அவரை தொடர்ந்து ஆஜித், ஆரி, ரம்யா பாண்டியன், சனம், நிஷா, அனிதா ஆகியோர் நாமினேஷனில் இடம் பிடித்தனர். இவர்களில் ஷிவானி பிக்பாஸ் வீட்டில் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி எந்த வேலையும் செய்ய வில்லை. ஆனால் பாலாஜிக்கு ஊட்டிவிடுவது, மசாஜ் செய்வது, அணைத்தப்படி நடப்பது அவருடன் கடலை போடுவதை மட்டுமே முதல் வேலையாக கொண்டுள்ளார்.

ரொமான்ஸ் கன்டென்ட்

ரொமான்ஸ் கன்டென்ட்

இதனால் சமூக வலைதளங்களில் அவரை மிக்சர் என்றே அழைத்து வருகின்றனர். ஆனால் பாலாஜியுடன் ரொமான்ஸ், கடலை என கன்டென்ட் கொடுப்பதால் அவரை வெளியேற்ற மாட்டார்கள் என கூறிப்பட்டது.

ஆஜித் வெளியேற்றம்?

ஆஜித் வெளியேற்றம்?

இதனிடையே ரம்யா பாண்டியன், அனிதா சம்பத், ஷிவானி, ஆஜீத் இந்த 4 பேர் தான் டேஞ்சர் ஸோனில் உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனால் அந்தளவுக்கு கன்டென்ட் கொடுக்காத ஆஜித்தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அனிதா வெளியேற்றம்?

அனிதா வெளியேற்றம்?

ஆனால் காலை முதலே சமூக வலைதளங்களில், ஆஜித் தான் வெளியேறுகிறார் என தகவல் வெளியானது. மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து அனிதா வெளியேறுகிறார் என்றும் ஷிவானி வெளியேறுகிறார் என்றும் நெட்டிசன்கள் தகவல்களை பதிவிட்டு வந்தனர்.

சனம் ஷெட்டியா?

சனம் ஷெட்டியா?

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சனம் ஷெட்டி வெளியேறுவதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. சனம் ஷெட்டி டேஞ்சர் ஸோனில் கூட இல்லை என்று கூறப்பட்ட நிலையில் அவர் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவி புராடெக்ட்

விஜய் டிவி புராடெக்ட்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னதான் ஹவுஸ்மேட்ஸ்களையும் ரசிகர்களையும் இரிட்டேட் செய்தாலும் சனம் ஷெட்டி ஓரளவுக்கு ஃபேன் பேஸ் கொண்டுள்ளார். ஆனால் பிக்பாஸ் வீட்டிலும் எதுவும் பெரிதாக செய்யாத ஃபேன் பேஸும் இல்லாத ஆஜித் காப்பாற்றப்பட்டுள்ளதை அறிந்த ரசிகர்கள், அவர் விஜய் டிவி புராடெக்ட் என்பதால் காப்பாற்றப்பட்டுள்ளதாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

மேலும் நிஷா, ஷிவானி ஆகியோர் காப்பாற்றப்பட்டிருப்பதாக வெளியான தகவலை கேட்டும் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இருந்த போதும் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுகிறார் என்பதை நாளை இரவு எபிசோடிலையே அதிகாரப்பூர்வமாய் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X