Just In
- 14 min ago
பிரியா பவானி சங்கருக்கு ஆப்பிள் பாக்ஸ் தேவையில்லை.. நடிகர் அருள்நிதியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!
- 48 min ago
சட்டையை கழட்டி கவர்ச்சியில் ரகளை செய்யும் ஆத்மிகா!
- 1 hr ago
லக்கி தான்.. அடுத்தடுத்து படங்கள்.. அசற வைக்கும் பிக் பாஸ் லாஸ்லியா.. டிரெண்டாகும் #Losliya
- 1 hr ago
கதை சொன்ன இயக்கத்துக்கு அப்படி ஷாக் கொடுத்த 'பேபி' ஹீரோயின்.. செம கடுப்பில் படக்குழு!
Don't Miss!
- News
மேற்கு வங்கத்தை.. வங்கதேசத்துடன் இணைக்க முயலும் மம்தா.. மே. வங்க பாஜக தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு
- Lifestyle
உங்களுக்கு முகப்பரு அதிகமா வருமா? இந்த சமையலறை பொருட்களை அடிக்கடி யூஸ் பண்ணுங்க...
- Automobiles
மீண்டும் விற்பனைக்கு வரும் கவாஸாகி கேஎல்ஆர்650 அட்வென்ச்சர் பைக்? 2022ல் அறிமுகமாகிறது...
- Sports
சின்னதா தான் பேசியிருக்கேன்... பெரிய அளவுல மாற்றம்... பிளாக்வுட் பரபர பேட்டி!
- Finance
11 ஆண்டுகளில் இல்லாத அளவு தங்கத்தின் தேவை சரிவு.. மறக்க முடியாத 2020..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அச்சச்சோ.. பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது ஜித்தன் ரமேஷ் இல்லை.. இவர்தான்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் ஜித்தன் ரமேஷ் வெளியேறுவார் என தகவல் பரவிய நிலையில் அவர் எவிக்ஷனில் இருந்து தப்பித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது வழக்கம்.
திங்கட்கிழமை ஹவுஸ்மேட்களால் நாமினேட் செய்யப்படும் போட்டியாளர், அந்த வாரம் முழுக்க மக்கள் அளிக்கும் வாக்கு எண்ணிக்கையின்படி மிகக் குறைவான வாக்குகளை பெறும் போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம்.
நல்லவரா.. கெட்டவரா? வில்லன் யாரு.. ஹீரோ யாரு? சொடக்கு போட்டு மிரட்டும் கமல்.. அதிர வைக்கும் புரமோ!

நாமினேஷன் டாப்புள் கார்டு
அந்த வகையில் இந்த வாரம் 7 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றிருந்தனர். பாலா, ஆரி, ரமேஷ், சோம சேகர், நிஷா, அனிதா மற்றும் சனம் ஷெட்டி ஆகிய 7 பேர் இடம் பிடித்தனர். ஆனால் இதனை தொடர்ந்து பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக நாமினேஷனை மாற்றியமைக்கும் டாப்புள் கார்டு என்ற டாஸ்க்கை கொடுத்தார்.

டாப்புள் கார்டு கிடைத்தால்
இந்த டாஸ்க்கில் நாமினேட் ஆன 7 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் இறுதி வரை நிற்கும் போட்டியாளர் நாமினேஷன் டாப்புள் கார்டை கைப்பற்றி நாமினேஷனில் இருந்து தப்பிக்கலாம் என்றார் பிக்பாஸ்.

விலகிய போட்டியாளர்கள்
மேலும் அந்த நபர் தனக்கு பதிலாய் நாமினேஷனில் இல்லாத ஒருவரை நாமினேட் பண்ணலாம் என்றும் அறிவித்தார். இதில் இருந்து பாலா, ஆரி, ரமேஷ், சோம் ஆகியோர் விலக, நிஷா, அனிதா, சனம் ஆகியோர் விடாப்பிடியாக இருந்தனர்.

அனிதாவின் மாஸ்டர் பிளான்
ஒருக்கட்டத்தில் நிஷாவும் சனமும் விட்டுக்கொடுக்க வெற்றி பெற்ற அனிதா நாமினேஷன் பாஸை தட்டி தூக்கினார். இதனால் நாமினேஷனில் இருந்து தப்பித்த அனிதா தனக்கு பதிலாய் சம்யுக்தாவை நாமினேட் செய்தார்.

சம்யுக்தா வெளியேற்றம்
இந்நிலையில் நாளைக்கான எபிசோடும் இன்றும் காட்சியாக்கப்படும் நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து அனிதாவால் நாமினேட் செய்யப்பட்ட சம்யுக்தா வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சுவாரசியம் இல்லாமல்
முன்னதாக ஜித்தன் ரமேஷ் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவார் என தகவல் பரவியது. ஜித்தன் ரமேஷ், எப்போதும் தூங்குவது, எதிலும் ஈடுபாடில்லாமல் இருப்பது என சுவாரசியம் குறைந்த நபராக உள்ளார்.

கட்டென்ட் இல்லை
அவரால் பெரிதாக கன்டென்ட் எதுவும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்படலாம் என கூறப்பட்டது. அதே நேரத்தில் குறைந்த வாக்குகள் பெற்ற நபர்களின் பட்டியல் சனம் ஷெட்டியும் சம்யுக்தாவும் டேஞ்சர் ஸோனில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஜீவா ஃபேன்ஸ்
மேலும் ஜித்தன் ரமேஷ் குறைந்த வாக்குகளை பெற்றதாக வெளியான தகவலை தொடர்ந்து ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவாவின் ரசிகர்கள் மிஸ்டுகால் கொடுத்தும் வாக்குகளை அள்ளிக்கொட்டியும் அவரை காப்பாற்றிவிட்டதாக தெரிகிறது. ஜித்தன் ரமேஷ் தப்பித்த நிலையில் சம்யுக்தா வெளியேறவுள்ளார். இதற்கான அறிவிப்பு நாளை அதிகார பூர்வமாய் வெளியாகும் என தெரிகிறது.