அடடா.. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான்.. வெளியான தகவல்.. ஃபீலாகும் ரசிகர்கள்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் திங்கள் கிழமை எவிக்ஷனுக்கான நாமினேஷன் புராசஸ் நடைபெறுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் எவிக்ஷன் நடைபெறுவதும் வாடிக்கையாக உள்ளது.

அந்த வகையில் கடந்த திங்கள் கிழமை நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. இதில் பிக்பாஸ் வீட்டில் இருந்து மொத்தம் 7 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெற்றனர்.

அனிதா 2வது இடம்

அனிதா 2வது இடம்

அவர்களில் சுச்சி அதிகளவாக 9 ஓட்டுக்களை பெற்று முதலிடம் பிடித்தார். அவரை தொடர்ந்து அனிதா சம்பத் 8 ஓட்டுக்களை பெற்று இரண்டாவது இடத்தை பெற்றார். மேலும் ரியோ, பாலாஜி, சம்யுக்தா, சோம், ஆரி ஆகிய 5 பேரும் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தனர்.

இந்த வாரம் யார்?

இந்த வாரம் யார்?

இவர்களில் மிகக் குறைந்த அளவு மக்களின் வாக்குகளை பெறும் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார். இதனால் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

நோஸ் கட் கொடுத்து கமல்

நோஸ் கட் கொடுத்து கமல்

கடந்த ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் அனிதா பேசியதையே திரும்ப திரும்ப பேச முயன்றதால் கமல் கேட்க ஆர்வம் காட்டவில்லை. நீங்கள் சொன்னது எனக்கு புரிந்துவிட்டது. ஆகையால் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து தனியாக பேசுங்கள் என்றார்.

கமல் மீது குற்றச்சாட்டு

கமல் மீது குற்றச்சாட்டு

இதனால் அப்செட்டானார் அனிதா சம்பத். தான் பேசுவதை கமல் கேட்கவில்லை என்றும் தன்னை பேச அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும் கமல் ஒரு சார்பாகவே பேசினார் என்றும் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார்.

கழுவி ஊற்றப்பட்டார்

கழுவி ஊற்றப்பட்டார்

இதனால் சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றப்பட்டார் அனிதா. கமல் ஹாசனை விமர்சித்ததால் இந்திய அளவில் ட்ரெண்டானார். கமலை விமர்சித்த அனிதாவை பிக்பாஸ் வீட்டிற்குள் வைத்திருக்க கூடாது அவரை வெளியேற்ற வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

ஹைஜீனிக்கே இல்லை

ஹைஜீனிக்கே இல்லை

தொடர்ந்து பிக்பாஸையும் விமர்சித்தார் அனிதா. 15 பேருக்கு 2 டாய்லெட்டுகள் மட்டுமே கொடுத்துள்ளனர். கொஞ்சம் கூட ஹைஜீனிக்கே இல்லை என்றும் டாஸ்க்கின் போது தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார்.

பிக்பாஸ் மீதும் புகார்

பிக்பாஸ் மீதும் புகார்

அதுவரை ஹவுஸ்மெட்ஸ்களை மட்டுமே டார்கெட் செய்த அனிதா, கமல் ஹாசன், பிக்பாஸ் என விமர்சித்து அடுத்தக் கட்டத்திற்கு சென்றதால் இந்த வாரம் அனிதாதான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவார் என கூறப்பட்டது.

பட்டியலில் கடைசி

பட்டியலில் கடைசி

இந்நிலையில் கடைசி இரண்டு நாட்களாய் போட்டியாளர்கள் பெற்ற வாக்குகள் அடிப்படையில் சுச்சிதான் கடைசியில் உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் அதிர்ச்சியான ரசிகர்கள் சுச்சிக்கு வாக்குகளை அள்ளி குவித்து அனிதாவை வெளியேற்ற வேண்டும் என தீயாய் வேலை செய்தனர்.

நம்ப தகுந்த வட்டாரத்திலிருந்து..

நம்ப தகுந்த வட்டாரத்திலிருந்து..

இருந்த போதும் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது சுச்சிதான் என்று நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகின. பிக்பாஸ் வீட்டில் சுச்சியின் நடவடிக்கைகள் திடீர் திடிரென மாறுகிறது.

திடீரென அழுகை

திடீரென அழுகை

திடீரென சிரிக்கிறார், அழுகிறார், கோப்பப்படுகிறார், ஹவுஸ்மெட்களை கிண்டல் செய்கிறார். தனியாக புலம்புகிறார். அதனை பார்த்த ரசிகர்கள் சுச்சிக்கு ஏதோ பிரச்சனை என கூறி வந்தனர்.

சுச்சிக்கு டிப்ரஷன்

சுச்சிக்கு டிப்ரஷன்

இதனிடையே நல்லா இருப்பவர்களே பிக்பாஸ் வீட்டிற்கு சென்றால் மனதளவில் பாதிக்கப்பட்டு விடுவார்கள். இதில் ஏற்கனேவே டிப்ரஷனில் இருக்கும் சுச்சியை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கவே கூடாது என்று ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.

Recommended Video

பெண்டு நிமிர்த்த தொடங்கிய பிக் பாஸ் | Day 44 | மணிகூண்டு Task
கடுப்பில் ரசிகர்கள்

கடுப்பில் ரசிகர்கள்

சுச்சி வெளியே வர வேண்டும், அதுதான் அவருக்கு நல்லது என்றும் ரசிகர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் சுசித்ரா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. சுச்சி வெளியேறியதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

இந்த வாரமும் அனிதா தப்பித்து விட்டாரே என கடுப்பும் ஆகியுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் அன்புக்காக ஏங்கியவர்களில் சுச்சியும் ஒருவர். மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் பட்டென பேசிய சுச்சியின் எவிக்ஷன் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய எபிசோட்

இன்றைய எபிசோட்

பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற எவிக்ஷன் எபிசோடு நேற்றே காட்சியாக்கப்பட்டதால் இந்த தகவல் வெளியானது. எவிக்ஷன் புராசஸ் இன்றைய எபிசோடில் அதிகாரப்பூர்வமாக ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X