'மாஸ்டரு'க்கு பின் விஜய்யை இயக்கப் போவது யார்? சுதா கொங்கரா வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறாராமே?
Recommended Video
சென்னை: விஜய் நடிக்கும் அடுத்தப் படத்தை யார் இயக்கப் போகிறார் என்கிற சஸ்பென்ஸ் அதிகரித்து வருகிறது.
ஶ்ரீகாந்த், விஷ்ணு விஷால் நடித்த துரோகி படம் மூலம் இயக்குனரானவர் சுதா கொங்கரா. அடுத்து, மாதவன், ரித்திகா சிங் நடித்த இறுதிச்சுற்று படத்தை இயக்கினார்.
இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து சூர்யா நடிப்பில் 'சூரரைப் போற்று' படத்தை இயக்கியுள்ளார்.

ஜி.ஆர்.கோபிநாத்
ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள படமான இதில், சூர்யா, நெடுமாறன் ராஜாங்கம் என்ற விமானியாக நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி, ஜோடியாக நடித்துள்ளார். ஜாக்கி ஷெராப், கருணாஸ், தெலுங்கு நடிகர் மோகன்பாபு, காளிவெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

விமானத்தில்
இந்த படத்தின் வெய்யோன் சில்லி பாடல் சமீபத்தில் விமானத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தை இயக்கி முடித்துள்ள சுதா கொங்கரா, அடுத்து அவர் விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்று செய்திகள் வெளியாயின.

மாஸ்டர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம், மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் முடிவடைகிறது. ஏப்ரல் 9 ஆம் தேதி படத்தை ரிலீஸ் பண்ணுவதற்கான வேலைகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

வெற்றிமாறன்
இதையடுத்து விஜய்யை, மகிழ் திருமேனி இயக்குவதாகக் கூறப்பட்டது. மேலும் இயக்குனர்கள் வெற்றிமாறன், பாண்டிராஜ், சுதா கொங்கரா ஆகியோரும் கதை சொல்லி உள்ளதாகவும் இதில் சுதா இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. சூரரைப் போற்று படத்தின் சில காட்சிகளை சுதா, நடிகர் விஜய்யிடம் காண்பித்துள்ளாராம். இதையடுத்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்துவருவதாகக் கூறப்பட்டது.

வெயிட்டிங்கில்
இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப் போற்று படத்தை பார்த்தபின், அவர் இயக்கத்தில் நடிப்பது பற்றி முடிவு செய்யலாம் என்று விஜய் நினைத்துள்ளதாகவும் அதுவரை அவரை வெயிட்டிங்கில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் விஜய் படத்தை அடுத்து இயக்கப் போவது யார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











