அஜித்தின் 62வது படத்தை இயக்கப்போவது இவர்தான்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: அஜித்தின் 62வது படத்தை இயக்கப்போவது யார் என்பது உள்ளிட்ட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவில் அரங்கேறும் சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் அஜித்தின் 61 வது படத்தை ஹெச் வினோத்தும் 62வது படத்தை சுதா கொங்கராவும் இயக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

இதேபோல் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன் அடுத்தடுத்து கார்த்தி மற்றும் சூர்யா படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் தளபதி 65 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள தகவலையும் தெரிவித்துள்ளார் பிகே.
மேலும் ஜகமே தந்திரம் படம் 17 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது. இதேபோல் அண்ணாத்த மற்றும் வலிமை திரைப்படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம் என்ற தகவலையும் கூறியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











