மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற ஹர்னாஸ் சந்து யார் ?... சுவாரசியத்தகவல் !
இஸ்ரேல் : 2021ம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து வென்றுள்ளார்.
Recommended Video
70வது மிஸ் யூனிவர்ஸ் போட்டி இஸ்ரேலின் ஈலாட் நகரில் நடைபெற்றது.
இதில், அர்ஜென்டினா, பிரேசில், சீனா, பிரான்ஸ்,இத்தாலி , இந்தியா , இஸ்ரேல் என 80 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர்.

முதல் 10 இடத்தில்
மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பல நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் ஹர்னாஸ் சந்து. ஆரம்பப் போட்டியில் நடுவர்களைக் கவர்ந்து அவர்கள் மனதில் இடம்பிடித்தார், நீச்சலுடைக்கான சுற்றில், மெரூன் நிற நீச்சலுடையில் நுழைந்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தி டாப் பத்தில் நுழைந்தார்.

மிஸ் யூனிவர்ஸ்
இதில், பராகுவேயின் நாடியா ஃபெரீரா மற்றும் தென்னாப்பிரிக்காவின் லலேலா மஸ்வானே ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 2021ம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் கிரீடத்தை 21 வயதான ஹர்னாஸ் சந்து வென்றார். இவருக்கு 2020 ஆம் ஆண்டுக்கான முன்னாள் பிரபஞ்ச அழகி, மெக்சிகோவைச் சேர்ந்த ஆண்ட்ரியா மெசா கிரீடத்தை சந்துவுக்கு வழங்கினார்.

பல பட்டங்கள்
ஹர்னாஸ் கவுர் சந்து , மார்ச் 3ந் தேதி 2000ம் ஆண்டு சண்டிகரில் பிறந்தார். சண்டிகரில் தனது பள்ளிப்படிப்பை முடித்த இவர், 17 வயதில் தனது பயணத்தைத் தொடங்கினார். இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்புதான் மாடலிங் துறைக்கு வந்தார். 2017-ம் ஆண்டு மிஸ் சண்டிகராக தேர்வு செய்யப்பட்டார். 2019ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியாவாக முடிசூட்டப்பட்டார், இதற்கு பின் மிஸ் திவா 2021 என பல பட்டத்தை வென்றார்.

திரைப்படங்களில்
ஹர்னாஸ் சந்து யார தியான் பூ பரன், மற்றும் பாய் ஜி குட்டாங்கே போன்ற பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பொது நிர்வாகவியல் துறையில் இவர் மாஸ்டர் டிகிரி படித்து வருகிறார். இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு அழகி போட்டிகளில் விருதை குவித்து வரும் இவர் திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உணர்ச்சி பொங்க
மிஸ்யூனிவர்ஸ் பட்டம் வென்ற ஹர்னாஸ் சந்து மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரில் நனைந்தார் .அப்போது பேசிய அவர், உலக அரங்கில் எனது நாட்டின் 1.3 மில்லியன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. எனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்காக நான் மிகவும் பாக்கியம் மற்றும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன் என உணர்ச்சி பொங்க கூறினார்.

21 ஆண்டுகளுக்கு பிறகு
இந்தியா சார்பில் லாரா தத்தா 2000-ம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார். அதன்பிறகு 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியப் பெண் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











